ரஜினி - அஜித் லிஸ்டுலையே இல்ல! அதிக வரி செலுத்தும் நடிகர்களில் 2-ஆவது இடத்தை பிடித்த விஜய்!

First Published Sep 7, 2024, 11:37 AM IST

ஒவ்வொரு படத்திற்கும் ஹீரோக்களின் சம்பளம் அதிகரித்து வருவதால், அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலங்களின் லிஸ்டில் விஜய் டாப் 3 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

Amitabh Bachchan:

அமிதாப் பச்சன்:

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் "பிக் பி" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கபடும் அமிதாப் பச்சன் உள்ளார். 55 ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். தற்போது ஒரு படத்திற்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன், சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்த 'கல்கி' படத்திற்கு 20 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியானது. நடிப்பு மட்டுமின்றி தயாரிப்புத் துறையிலும் கவனம் செலுத்தி வருவதால், இவருடைய வருமானமும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மூலமாகவும் நல்ல லாபத்தை பார்த்து வருகிறார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி,  அமிதாப் பச்சன் அதிக பாசமாக ரூபாய் 71 கோடி வரி செலுத்தி வருகிறாராம். இதன் மூலம் அதிக வரி செலுத்தும் பிரபலங்களின் லிஸ்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

Salman Khan

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் சல்மான் கான். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, 58 வயதிலும் பிரம்மச்சாரியாக இருக்கும் ஒரே நடிகர் சல்மான் கான் என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் பாலிவுட்டில் லவர் பாய் இமேஜ் உள்ள ஹீரோவும் இவர்தான். உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, எழுத்தாளராக சில படங்களில் பணியாற்றிய பின்னர் ஹீரோவானார் சல்மான் கான். கடந்த 36 ஆண்டுகளாக ஹிந்தியில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சல்மான் கான், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இருப்பினும், பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாகத் வலம் வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான  "கிசி கா பாய் கிசி கி ஜான்" திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. 2024-ஆம் ஆண்டு இவருடைய திரைப்படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. "டைகர் 3" படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்கும் சல்மான் கான், ஒரு விளம்பரத்திற்கு 6 முதல் 8 கோடி வரை வாங்குகிறாராம். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் 250 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இவர் அதிக வரி செலுத்தும் இந்திய நடிகர்கள் லிஸ்டில் 3-ஆவது இடத்தில் உள்ளார். மேலும் சல்மான் கான் 75 கோடி வரை வரி செலுத்துவதாக கூறப்படுகிறது.

Latest Videos


Shah Rukh Khan:

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவரைப் பார்ப்பதற்கு முன், முதலிடத்தில் உள்ளவரைப் பார்ப்போம். இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நடிகர் ஷாருக்கான் தான். "நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்" என்று வெளிநாட்டில் யாரிடமாவது சொன்னால்... "ஷாருக்கானின் நாட்டிலிருந்து வருகிறீர்களா?" என்று கேட்பார்களாம். அந்தளவுக்கு பிரபலமான நடிகர் ஷாருக்கான். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். ஒரு படத்திற்கு 150 முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும், ஒரு விளம்பரத்திற்கு 10 கோடி வரை வாங்குகிறாராம். குறிப்பாக கடந்த ஆண்டு இயக்குனர் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் இவர் நடித்த "ஜவான்" படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலக அளவில் சுமார் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது. சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்புத் துறையிலும் வெற்றிக்கொடி நாட்டி உள்ள ஷாருக்கான், அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலங்களில் முதல் இடத்தில் உள்ளார். அரசுக்கு 92 கோடி ரூபாய் அவர் வரி செலுத்துவதாக கூறப்படுகிறது.

Thalapathy Vijay:

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகர் தளபதி விஜய் தான். நடிகர் விஜய் அரசுக்கு அதிக பட்சமாக ரூபாய் 80 கோடி வரை வரி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், இளம் அரசியல் தலைவராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ஃபேன் பேஸ் கொண்ட விஜய், நடிப்பில் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம், 'கோட்'. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம், முதல் நாளில் மட்டுமே ரூபாய் 125 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தன்னுடைய 69-ஆவது படத்துடன் சினிமாவுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டு முழுமையாக அரசியலில் குதிக்கவுள்ள தளபதி விஜய்,கோட் படத்திற்கு மட்டும் ரூபாய் 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகர் என்கிற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். இதன் காரணமாகவே ரூபாய் 80 கோடி வரி செலுத்தும் நடிகராக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!