இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடலை சுட்டி காட்டி, இதே ராகத்தில் அஜித்தின் 'ஆசை' படத்தில் ரொமான்டிக் பாடல் இடம்பெற வேண்டும் என இயக்குனர் வசந்த் கேட்க, தனது பணியை சிறப்பாக செய்து முடித்தார் தேவா. அது எந்த பாடல் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஒரு திரைப்படத்திற்கு எப்படி கதை, திரைக்கதை, நடிகர்கள், முக்கியமோ... அதேபோல் இசை என்பதும் ஒரு திரைப்படத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பழங்காலத்தில் இருந்தே இசையை மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு காட்சியை நாம் பார்க்கும் அந்த சூழ்நிலையை ரசிகர்கள் எளிதில் உணரும் விதத்தில் அமைகிறது.
26
Director Shankar
அதேபோல் திரைப்படங்களிலும் இடம்பெறும் பாடல்கள், அதனைக் கேட்கும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. எனவே தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், மணிரத்தினம், போன்ற இயக்குனர்கள் தாங்கள் இயக்கம் திரைப்படங்களில், கண்டிப்பாக நான்கு பாடல்களாவது இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
சமீப காலமாக, சில திரைப்படங்கள் பாடல்களே இல்லாமல் வெளியாகி இருந்தாலும்... அந்த படங்களை பிஜிஎம் இசையால் தூக்கி நிறுத்துகிறார்கள் இசையமைப்பாளர்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர் என்பவர் மிகவும் முக்கிய நபராக பார்க்கப்படுவதோடு, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அவரின் இசையை கொண்டாடும் விதத்தில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடத்தி அவர்களை சிறப்பிக்கிறார்கள்.
46
AR Rahman
இந்நிலையில் ஆஸ்கர் நாயகன், ஏ ஆர் ரகுமான் போட்ட பாடலின் ராகத்தை அப்படியே காப்பி அடித்து இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைப்பாளர் தேவா கொடுத்துள்ளார். இது பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதாவது ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்பது அதை பற்றி அலசி ஆராய்ந்த இசையமைப்பாளர்களுக்கு தெரியும். அதே சமயம் ஒரு ராகத்தை எந்த சூழலுக்கும் பொருந்தும் வகையில் பாடல்களை உருவாக்கவும் முடியும். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் 'டூயட்' படத்தில் உச்சாகத்தை வெளிப்படுத்தும் விதத்தில், எனர்ஜிடிக் பாடலாக உருவாக்கிய 'மெட்டுப்போடு மெட்டுப்போடு' பாடலை துளியும் அந்த பாடலின் சாயல் இன்றி... அஜித்துக்கு ரொமாண்டிக் பாடலை உருவாக்கி கொடுத்து ஹிட் அடிக்கவைத்தார் இசையமைப்பாளர் தேவா.
அதாவது ஏ.ஆர்.ரகுமானின் 'மெட்டுப்போடு மெட்டுப்போடு' பாடல் இயக்குனர் வசந்துக்கு மிகவும் பிடித்து போன நிலையில்.. இதே 'ஆனந்த பைரவி' ராகத்தில், ஆசை படத்தில் அஜித்தின் ரொமான்டிக் பாடல் வேண்டும் என கேட்டுள்ளார். இதை தொடர்ந்து தேவா 'கொஞ்சநாள் பொறு தலைவா... வஞ்சிக்கொடி இங்கே வருவா' என்கிற அழகிய ரொமான்டிக் பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, ஏ.ஆர்.ரகுமானின் மனதை கவர்ந்த பாடல்களில் ஒன்றாகவும் மாறியதாம். இதை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்திலும் இதே ராகத்தில் இயக்குனர் ஒரு பாடல் வேண்டும் என தேவாவிடம் கேட்டபோது.. அவர் 'செங்குருவி செங்குருவி காடமடை செங்குருவி' என்கிற பாடலை இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
66
Yuvan Shankar Raja
இது போல் ஒரு பாடலையோ... அல்லது இசையையோ குறிப்பிட்டு இயக்குனர்கள் கூறி, தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கும் பழக்கம் காலம் காலமாக இருந்துள்ளது. எம்.எஸ்.வி, இசையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசை ஜாம்பவான்களிடம் கூட, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் வெளியான பாடலின் ராகத்தை சுட்டி காட்டி, இதே ராகத்தில் ஆனால் அந்த பாடலின் சாயல் இல்லாமல் தங்களுடைய படத்திற்கு ஒரு பாடல் அமைத்து தர வேண்டும் என கூறுவது வழக்கமான ஒன்று தான். யுவன் ஷங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள், இதனை ஓபனாகவே கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.