ஏற்கனவே சில பாடல்களை திரையில் பாடி அசத்தியுள்ள அதிதி, இந்தியன் 2 திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் "அந்நியன்" திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை பாடியிருந்தார். அப்போது ஸ்ருதியை ஒப்பிட்டு, அதிதி சங்கரை மிகப் பெரிய அளவில் பலரும் ட்ரோல் செய்தனர். தொடர்ச்சியாக அவர் எந்த ஒரு சிறு விஷயங்கள் செய்தாலும் அது பெரிய அளவில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இப்படி அவருடைய நடிப்பு, நடனம், பாடல் என்று தொடர்ச்சியாக அவர் கிண்டல் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் இப்போது தெலுங்கு திரையுலகத்திற்கு தனது பயணத்தை மாற்ற உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குனரான விஜய் கனகமெடலா என்பவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படங்கள் எல்லாம் ரீமேக் படங்களா?