ஆம், அந்த சிறுவன் வேறு யாருமல்ல உலக நாயகன் கமல்ஹாசன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றிய பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நமது முதல் குடியரசு துணைத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்த காலத்தில் கமல் சிறுவனாக இருந்தது மட்டுமல்ல.. அப்போது துணை குடியரசுத் தலைவர் கையால் பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.