பேரழகன் முதல் கங்குவா வரை.. 27 ஆண்டு கால கலைப்பயணம் - சூர்யா எடுத்த வித்யாசமான முயற்சிகள்!

First Published | Sep 6, 2024, 9:35 PM IST

27 Years of Suriya : கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு இன்று (செப்டம்பர் 6) வெளியான "நேருக்கு நேர்" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சூர்யா.

Perazhagan

தமிழ் திரையுலகை பொருத்தவரை மிகச் சிறந்த நடிகராக வலம் வந்தவர் சிவகுமார். இளம் வயது முதலிலேயே ஒழுக்கமான நடிகராகவும், மனிதராகவும் கலை உலகில் அவர் திகழ்ந்துவந்த நிலையில், அவரது இரண்டு மகன்களையும் அந்த வகையிலேயே வளர்த்தும் வந்தார். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட இல்லாமல் பயணித்து வரும் வெகு சில நடிகர்களில் சிவகுமாரின் இரண்டு மகன்களும் அடக்கம்.

தம்பி கார்த்திக்கு முன்பே அண்ணன் சூர்யா திரை உலகில் அறிமுகமானார். தொடக்க காலத்தில் அவருடைய மெச்சூரிட்டி இல்லாத நடிப்பு பெரிய அளவில் எடுபடவில்லை. ஒரு வசனத்தை தெளிவாக கூட பேச முடியாமல் இருந்த நடிகர் சூர்யா, அதன் பிறகு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான "நந்தா", "பேரழகன்", "கஜினி" "ஏழாம் அறிவு" என்று பல திரைப்படங்களில், அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று நிரூபித்தார்.

அந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "பேரழகன்" இரட்டை வேடங்களில் சூர்யா அசத்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. அதிலும் குறிப்பாக "சின்னா" என்ற கதாபாத்திரத்தில், கூன் விழுந்த தோற்றத்தில் நடித்து தனது அசாத்திய நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.

இந்திய சினிமாவின் பிரபல ஜோடிகள் இவர்கள்தான்! தலைசுற்றும் சொத்து மதிப்பு!

Ghajini

கடந்த 2005ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "கஜினி". தமிழ் திரை உலகில், மனரீதியான ஒரு விசித்திர நோய் உள்ள ஹீரோ ஒருவர் தன் காதலியை கொன்றவர்களை தேடி தேடி தீர்த்துக்கட்டும் ஹீரோவின் கதையாகி வெளியாகி ஹிட்டான ஒரு படம். சஞ்சய் ராமசாமி மற்றும் கஜினி என்று இரு வேறு பரிணாமங்களில் நடித்து சூர்யா அசத்தியிருப்பார். ஏ.ஆர் முருகதாஸின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு இந்த படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு வழி வகுத்தது. 

அதேபோல ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசை இந்த திரைப்படத்திற்கு மீதி பலத்தை சேர்த்தது. உடல் முழுக்க பச்சை குத்திக்கொண்டு வெகு சில அசைவுகளை மட்டுமே உடலில் அமைத்து வில்லன்களை வேட்டையாடும் நாயகனாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அவருடைய திரைவரலாற்றில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தனது படங்களில் இதுவும் ஒன்று. 

சுமார் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் 50 கோடி ரூபாயை தாண்டி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. மேலும் இந்த திரைப்படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இதே கதையை பாலிவுட்டில் பிரபல நடிகர் அமீர் கானை வைத்து இயக்கியது அனைவரும் அறிந்ததே. அப்போது சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிந்தி கஜினி உலக அளவில் 230 கோடிகளை வசூல் செய்தது.

Tap to resize

7aum Arivu

ஒரு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸுடன் நடிகர் சூர்யா இணைந்த திரைப்படம் தான் "ஏழாம் அறிவு". இந்த திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக கலை உலகில் அறிமுகமானார் சுருதிஹாசன். நமது தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த "போதிதர்மர்" என்கின்ற இளவரசனின் கதையை மீண்டும் தமிழக மக்களுக்கு நினைவூட்டும் வண்ணம் ஏ.ஆர் முருகதாஸ் உருவாக்கிய ஒரு புனைவு கதையே "ஏழாம் அறிவு". 

போதிதர்மராகவும், அரவிந்தன் என்கின்ற கதாபாத்திரத்திலும் மிக நேர்த்தியாக நடித்திருப்பார் நடிகர் சூர்யா. குறிப்பாக போதிதர்மர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா தோன்றும் பொழுது, அதற்கு ஏற்ப தனது உடல் வாகை மாற்றி பல பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு அந்த திரைப்படத்தில் நடித்து முடித்தார். வசூல் ரீதியாக மெகா ஹிட் ஆகவில்லை என்றாலும், கன்டென்ட் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. 

மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நல்ல பல பாடல்கள் ஒலித்த ஒரு திரைப்படம் ஏழாம் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா தன்னால் எந்தவிதமான கதாபாத்திரத்தையும் நடிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த ஒரு படம் இது.

Kanguva Movie

தனது கலை உலக பயணத்தில் 27வது வருடத்தை நிறைவு செய்துள்ள நடிகர் சூர்யாவிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இப்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் குழுவினர், ஒரு பிரத்தியேகமான போஸ்டரை வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அக்டோபர் மாதம் 10ம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு வழிவிட்டு அந்த படம் வேறு தேதியில் அறிமுகமாகவுள்ளது. சூர்யாவின் கனவு திரைப்படமான இந்த கங்குவா படத்திற்காக சுமார் 2 ஆண்டுகள் பல முயற்சிகளை சூர்யா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"தலைவர்" பட மொத்த வசூல்.. 3 மடங்காய் முதல் நாளிலே அள்ளிய தளபதி - GOAT செய்த செய்கை!

Latest Videos

click me!