இயல்பாகவே கமர்சியல் ரீதியான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் வெங்கட் பிரபு. ஏற்கனவே சென்னை 28, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து அவர், முதல் முறையாக தளபதி விஜயை வைத்து இந்த கோட் திரைப்படத்தை இயக்கி, அதை வெற்றி படமாக மாற்றியுள்ளார். விரைவில் அரசியலில் தளபதி விஜய் களமிறங்க உள்ள நிலையில், தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, ஒரு கமர்சியல் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு மற்றும் விஜயின் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு என்றால் அது மிகையல்ல.