இவருக்கு அடுத்தபடியாக... பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார். இவர் சமீப காலமாக நடிக்கும் படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும், சம்பள விஷயத்தில் மட்டும் கறார் காட்டுகிறார் என கூறப்படுகிறது. அதன்படி தான் நடிக்கும் ஒரு படத்திற்கு, ரூபாய் 125 கோடி வாங்குகிறார். அதிக வருமானம் கொண்ட நடிகர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள இவர். சினிமாக்களைத் தவிர, சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஷோக்களை தொகுத்து வழங்குவதன் மூலமாகவும் சுமார் 300 கோடிக்கு மேல் கல்லா கட்டுகிறார். அந்த வகையில் சல்மான் கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.3,508 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சல்மான் கான் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனிமல் பட நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
கடந்த 36 ஆண்டுகளாக ஹிந்தி மொழியில் டாப் நடிகராக வலம்வரும் நடிகர் சல்மான் கான் பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் இன்றளவும் பாலிவுட் உலகில் டாப் நடிகராக வலம்வருபவர்களில் அவரும் ஒருவர். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு அவர் நடிப்பில் "டைகர்" என்ற படம் வெளியானது. இந்த ஆண்டு எந்த படமும் இதுவரை அவர் நடிப்பில் வெளியாகவில்லை என்றாலும் இப்பொது சிக்கந்தர் என்ற படத்தில் பிசியாக அவர் நடித்து வருகின்றார்.
ஒரு படத்துக்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் பெரும் டாப் நடிகரான சல்மான் கான், அவர் நடிக்கும் விளம்பர படங்களுக்கு சுமார் 6 முதல் 8 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். அதுமட்டுமல்ல சல்மான் கான் வரியாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் கட்டுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.