இது ஒரு புறம் இருக்க, தளபதிக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் தல அஜித்தை வைத்து தரமான சம்பவம் ஒன்றை செய்திருந்தார் வெங்கட் பிரபு. அது தான் "மங்காத்தா" என்கின்ற திரைப்படம். இன்றைய காலகட்டத்தில் தல அஜித் ரசிகர்களினுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பே அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது தான்.
இதுகுறித்து பேசிய வெங்கட் பிரபு, அதற்கான சாத்திய கூறுகள் நிறையவே இருக்கிறது. ஆனால் தல இப்போது பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தனக்கென சொந்தமாக ஒரு பைக் கம்பெனியையும் அவர் இப்போது நடத்தி வருவதால், அவர் ஓகே சொன்ன மறுநிமிடமே மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தொடங்கும் என்று வாக்களித்திருக்கிறார்.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான "மங்காதா" திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டு, உலக அளவில் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய ஹிட்டாக மாறியது. தல அஜித்தின் திரை வரலாற்றிலேயே அவருடைய ரசிகர்களால் அதிக அளவில் விரும்பப்பட்ட படங்களில் மங்காத்தா திரைப்படம் ஒன்று.
இப்படி போட்டி போட்டுக்கொண்டு தல மற்றும் தளபதி ஆகிய இருவருக்கும் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள வெங்கட் பிரபு, தங்களுடைய அபிமான நாயகர்களுக்கு மட்டும் பிளாப் படத்தை கொடுத்துவிட்டதாக இப்பொழுது இணையத்தில் சண்டை போட்டு வருகின்றனர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இரு நடிகர்களின் விசிறிகள்.