Longest run tamil Movies in theatres : திரையரங்கில் அதிக நாள் ஓடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன... அவை எத்தனை நாட்கள் ஓடியது என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரத்திற்கு மேல் ஓடினாலே அதிசயமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஓடிடி தளங்களின் வளர்ச்சி தான். எந்த ஒரு படமாக இருந்தாலும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 1 மாதத்திற்குள் ஓடிடிக்கு வந்துவிடுகிறது. இதனால் தியேட்டர் செல்வோர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. ஆனால் ஓடிடி என்பது அறிமுகம் ஆவதற்கு முன்னர் வரை புதுப்படங்களை தியேட்டரில் மட்டும் தான் பார்க்க முடியும் என்கிற நிலை இருந்தது.
அதன் காரணமாக அந்த காலகட்டத்தில் தமிழ் படங்கள் அசால்டாக 100 நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைக்கும். சில படங்கள் அதற்கு மேலே ஓடிய சம்பவங்களும் உள்ளன. ஆனால் அந்த பட்டியலில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்று கூட இல்லை. அந்த வகையில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்த மாஸ்டர் பீஸ் படங்கள் பற்றியும் அவை எத்தனை நாட்கள் ஓடியது என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
ஹரிதாஸ்
தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் ஹரிதாஸ். கடந்த 1944-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை சுந்தர ராவ் இயக்கி இருந்தார். இதில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 1944-ம் ஆண்டு அக்டோபர் 16ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து மூன்று ஆண்டு இப்படம் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.
சந்திரமுகி
பி வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த படம் சந்திரமுகி. கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ரஜினியுடன் வடிவேலு, நாசர், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வினீத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் மட்டும் 890 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
35
Vasantha Maligai
வசந்த மாளிகை
சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1971-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் வசந்த மாளிகை. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட் படமாக வசந்த மாளிகை உள்ளது. இப்படம் திரையரங்குகளில் தொடர்ச்சியாக 750 நாட்கள் அதாவது இரண்டு ஆண்டுகள் ஓடி சாதனை படைத்து உள்ளது.
பயணங்கள் முடிவதில்லை
1980-களில் டாப் ஹீரோவாக வலம் வந்தவன் மோகன். இவர் நடிப்பில் கடந்த 1982-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் பயணங்கள் முடிவதில்லை. இப்படத்தை சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக பூர்ணிமா பாக்கியராஜ் நடித்திருந்தார். இப்படம் தியேட்டரில் 437 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். அவர் இயக்கத்தில் கடந்த 1980-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ஒரு தலை ராகம். ஷங்கர், ராஜேந்தர் போன்ற பிரபலங்கள் நடித்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமின்றி ஓராண்டுக்கு மேல் தியேட்டர்களில் ஓடியது.
கரகாட்டக்காரன்
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்த படம் கரகாட்டக்காரன். கனகா நாயகியாக நடித்த இப்படம் இன்றளவும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ராமராஜனை பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது இந்த படம் தான். இப்படமும் திரையரங்கில் ஓராண்டுக்கு மேல் ஓடியது.
55
Moondram Pirai
மூன்றாம் பிறை
பாலு மகேந்திரா இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் மூன்றாம் பிறை. இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளாமே நடித்திருந்தது. இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் திரையரங்குகளில் ஓராண்டு ஓடி சாதனை படைத்தது.
கிழக்கே போகும் ரயில்
ராதிகா சரத்குமார் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் கிழக்கே போகும் ரயில். இப்படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். கடந்த 1978-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படத்தில் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதிகா. இப்படமும் தியேட்டரில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.