Vaali, Vairamuthu
சங்க இலக்கியத்தில் இருந்து புகழ்பெற்ற வரியை எடுத்து அதை தமிழ் சினிமா பாடல்களுக்கு பாடலாசிரியர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்படி குறுந்தொகையில் இருந்து ஒரே வரியை வாலி, வைரமுத்து, யுகபாரதி, கபிலன் உள்பட சில பாடலாசிரியர்கள் தங்கள் பாடல்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். அது என்ன வரி.. எந்தெந்த பாடல்களில் அந்த வரியை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Vairamuthu
குறுந்தொகை நூலில் ‘செம்புலப் பெயனீர் போல அன்புடைய நெஞ்சம் தாங்கலந் தனயே’ என்று ஒரு பாடல் இருக்கு. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு காதலன் தன்னுடைய காதலியிடம், செம்மண்ணில் கலந்த தண்ணி மாதிரி அன்பால் நாம் சேர்ந்துவிட்டோம் இனி யாராலையும் நம்மை பிரிக்க முடியாது என்பது தான். இந்த குறுந்தொகை பாடல் வரியை பயன்படுத்தி தமிழில் 6 பாடல்கள் வந்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஹிட்டான பாடல் நறுமுகையே. இந்த பாடலை வைரமுத்து எழுதி இருந்தார். அவர் இந்த பாடலில், ‘செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன’ என்கிற வரியில் குறுந்தொகை பாடல் வரியை பயன்படுத்தி இருப்பார்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதல் நாள் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
vaali
அதேபோல் சகா படத்தில் இடம்பெற்று ஹிட்டான யாயும் பாடலில் ஷபீர் இந்த குறுந்தொகை பாடல் வரியை அப்படியே பயன்படுத்தி இருந்தார்.
வாலிபக் கவிஞர் வாலிக்கும் இந்த வரி மீது ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. அவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற முன்பேவா பாடலில் எழுதி இருப்பார். அதில், ‘நீரும் செம்புலச் சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம்’ என்று பயன்படுத்தி இருப்பார் பாடலாசிரியர் வாலி.
yuga bharathi
அதேபோல் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த ஜிப்ஸி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மனம் எனும் மாய ஊஞ்சல்’ பாடலில் பாடலாசிரியர் யுக பாரதி இதே வரியை பயன்படுத்தி இருந்தார். அப்பாடலில், ‘நான் மண் சேர்ந்து நீர் போல உன் சாயல் கொண்டேனே’ என அவர் எழுதி இருப்பார்.