தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கு விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் ரிலீஸ் ஆனால், அனைவரின் கவனமும் அப்படம் முதல் நாளில் எவ்வளவும் வசூல் செய்திருக்கிறது என்பதில் தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் லியோ. இப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படமாக உள்ளது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.148 கோடி வசூலை வாரிக்குவித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று வரை இந்த ரெக்கார்டை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை.
2. எந்திரன் 2.0
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த படம் எந்திரன் 2.0. கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக ரூ.800 கோடி வசூலித்திருந்த இப்படம், முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.