
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. 40 வயதைக் கடந்தபோதிலும் இளமை குறையாமல் இருப்பதால் நடிகை திரிஷாவுக்கு மவுசு குறையவில்லை. ஆரம்பத்தில் துணை நடிகையாக நடித்து வந்த திரிஷாவை மெளனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் அமீர். இப்படத்தின் வெற்றிக்கு பின் சாமி, கில்லி, திருப்பாச்சி என டாப் கியரில் சென்றார் திரிஷா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது.
பின்னர் சில சறுக்கல்களை சந்தித்த திரிஷா தற்போது மீண்டும் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்களில் நடித்து தனது பழைய மவுசை மீண்டும் நிரூபித்துள்ள திரிஷா, தற்போது கமலுடன் தக் லைஃப், அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி என டாப் ஹீரோக்களின் படங்களில் வரிசையாக கமிட் ஆவதோடு மட்டுமின்றி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் வலம் வருகிறார் திரிஷா.
திரிஷாவின் சினிமா கெரியர் வெற்றிகரமாக சென்றாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளன. அந்த வகையில் திரிஷாவால் தன் வாழ்க்கையே போச்சு என தெலுங்கு பட தயாரிப்பாளர் கிரிதர் மாமிடிபள்ளி கூறி இருக்கிறார். திரிஷா குறித்து அவர் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அதன்படி அவர் கூறியதாவது : “நீண்ட காலமாக திரிஷாவை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஒருமுறை திரிஷாவின் கால்ஷீட்டும் கிடைத்தன. ஆனால் அந்த சமயம் கதை தயாராக இல்லை. அப்போது திரிஷா பாலய்யாவுடன் இணைந்து லயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படம் பண்ணனும்னு திரிஷா கிட்ட சொன்னேன், அவர் சரின்னு சொன்னதால் நிறைய கதைகள் சொன்னோம், ஆனா அவங்களுக்கு எதுவும் பிடிக்கல. அப்போ இயக்குனர் கோவர்த்தன ரெட்டி ஒரு ஹாரர் கதையோட வந்தார். அந்த கதை திரிஷாக்கு பிடிச்சிருந்தது. உடனே படத்தை ஆரம்பிச்சோம்.
இதையும் படியுங்கள்... வாலி முதல் வைரமுத்து வரை; 5 பாடலாசிரியர்கள் போட்டிபோட்டு காப்பி அடித்த பாடல் வரி பற்றி தெரியுமா?
திரிஷாக்கு ஒரு சம்பளம் நிர்ணயிச்சு சொன்னோம். அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. படம் ஆரம்பிச்சு சில நாள் ஷூட்டிங் நல்லபடியா போயிட்டு இருந்தது. அதுக்கப்புறம் திரிஷா, கோவர்த்தன ரெட்டி இருவராலும் பிரச்சனை ஆரம்பிச்சுது. அவங்க ரெண்டு பேரும் படத்து மேல சரியா கவனம் செலுத்தல. ரொம்ப கஷ்டப்பட்டேன். படம் முடிய போற சமயத்துல படத்துக்கு நல்ல பிசினஸும் இருந்தது.
இதை அறிந்த கோவர்த்தன ரெட்டி, திரிஷாவிடம் இந்த படத்துக்கு 10 கோடி வரைக்கும் வியாபாரம் நடந்திருப்பதாகவும், ஆனா உங்களுக்கு மட்டும் குறைவான சம்பளம் கொடுக்குறாங்கன்னு சொல்லிட்டாரு. இதனால திரிஷா பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 10 கோடி ரூபாய் வியாபாரம் பண்ணிட்டு எனக்கு ஒரு கோடி ரூபாய் கூட கொடுக்க மாட்டீங்களான்னு கேட்டாங்க.
அந்த சமயத்துல திரிஷாக்கு அவ்ளோ மார்க்கெட் இல்ல. படத்துக்கு அதிக பட்ஜெட் ஆயிடுச்சு. அது திரும்ப வருமா இல்லையான்னு கூட தெரியல. ஒரு கோடி ரூபாய் கொடுக்க முடியாது. உங்களுக்கு வேணும்னா தமிழ் சேட்டிலைட் உரிமையை கொடுக்குறோம்னு சொன்னேன். எவ்வளோ சொல்லிப் பார்த்தும் கேட்கல. இறுதியில் அவங்க கேட்ட சம்பளத்த கொடுக்க வேண்டியதா போச்சு. படம் ரிலீஸ் ஆகி தோல்வியடைந்தது.
இதனால என் வாழ்க்கையே தலைகீழா ஆயிடுச்சு. திரிஷாவ வச்சு படம் பண்ணனும்னு நினைச்சதுல இருந்தே என் வாழ்க்கை மாறிப் போச்சு. இதுக்கு காரணம் அந்த இயக்குனரும் திரிஷாவும் தான் எனதயாரிப்பாளர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கு முன்னர் திரிஷா தமிழ்ல ஒரு படம் பண்ணாங்க. அந்த படமும் தோல்வியடைந்ததால் அந்த படத்தோட தோல்விக்கு அவர் தான் காரணம்னு தயாரிப்பாளர் கிரிதர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதல் நாள் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ