
கடந்த ஒரு வாரமாக, மலையாள திரையுலகை பரபரப்பில் உச்சசத்திற்கு கொண்டு சென்றது ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரம். இந்த அறிக்கையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தி முத்த காட்சிகளில் நடிக்க வைப்பது, கட்டாயப்படுத்தி கட்டிப்பிடிப்பது போன்ற பல குற்றங்களை நடிகைகள் சிலர் தானாக முன்வந்து கூறி இருந்தனர். 2019-ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டுகள் அடங்கிய ஃபைலை கேரள அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா சமர்ப்பித்த நிலையில்.... சுமார் நான்கு வருடங்களுக்கு பின்னரே இந்த தகவல் வெளியாகி பல முன்னனி நடிகர்கள் தலையில் பாறாங்கல்லை இறக்கியது போல் அமைந்தது.
இந்த அறிக்கை வெளியான பின்னர், பல நடிகைகள் கேரளாவில் மட்டும் அல்ல, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட திரையுலகிலும் இதே போன்ற பிரச்சனைகள் உள்ளதாக கூறினார். இதனை ராதிகா, குஷ்பூ, ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகள் ஒப்புக்கொண்டனர். அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார், மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க கேரளா சென்றபோது நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இது தான்; ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சீதா!
அதாவது, "மலையாள பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நான் நடிக்கும் போது... சில ஆண்கள் கும்பலாக நின்று போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாக நான் செல்லும்போது ஏதோ வீடியோவை பார்த்து தான் சிரிக்கிறார்கள் என்பது புரிந்தது. அங்கிருந்த தமிழ் ஆள் ஒருவரை கூப்பிட்டு அவர்கள் அப்படி என்ன வீடியோவை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்? என கேட்டேன். அவர் அப்போது சொன்ன விஷயம் எனக்கு தூக்கி வாரி போட்டது. அவர்கள் நடிகைகள் சிலர் கேரவன்ல துணி மாற்றும் வீடியோ பார்த்து தான் சிரிக்கிறார்கள் என சொன்னார்".
அந்த சம்பவத்துக்கு பின் எனக்கு தெரிஞ்ச எல்லா நடிகைகளிடமும், கேரவன் உள்ள போகும்போது ஜாக்கிரதையா இருங்கள் என்பதை சொல்லி வருகிறேன் என்று கூறி இருந்தார் ராதிகா... கேரவன் இல்லாத காலத்தில் கூட நான் நடித்திருக்கிறேன், அப்போது மரத்தில் பின்னால் நின்று துணி மாற்றுவோம். அந்த சமயங்களில் கூட நான் பாதுகாப்பாக உணர்தேன். ஆனால் கேரவனில் பாதுகாப்பு உள்ளது என நினைக்கும் சிலருக்கு இப்படி ஒரு ஆபத்து உள்ளது பேரதிர்ச்சி என தெரிவித்தார்.
எவ்வளவு சொல்லியும் கேட்கல; திரிஷாவால் என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு! ஆதங்கத்தை கொட்டிய பிரபலம்
ராதிகா கூறிய இந்த விஷயம் தான்... அவருக்கே இப்போது பேக் பயர் ஆகியுள்ளது. நடிகை ராதிகா கூறிய இந்த விஷயம் குறித்து விசாரணை செய்ய, கேரளா சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ராதிகாவுக்கு போன் போட்டு இந்த விவகாரக் குறித்து துருவி துருவி கேள்வி கேட்டபோது, இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது எங்கு? எப்போது... என்பது போன்ற தகவல்களையும், அவர்களுடைய பெயரை நான் சொல்ல மாட்டேன் என நடிகை ராதிகா அந்தர் பல்டி அடித்துள்ளார். இதை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் ராதிகாவுக்கு எந்த அசிங்கம் தேவையா? என பங்கம் செய்து தன்னுடைய வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், துணிச்சலும் - திராணியும் இருந்தால், ராதிகா யாரு அவர்கள், என்பதை சொல்லட்டும். அவர்களை காட்டி கொடுத்தால் அவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . ஆனால் ராதிகா, படுத்துக்கொண்டேன் எச்சில் துப்பினால் நம்ம மேலேயே துப்புற மாதிரி இருக்கும்னு சொல்றாங்க. இப்போ மட்டும் என்ன ஆச்சு அதுதானே நடந்திருக்கு. உங்களுக்கு சோறு போட்ட தொழிலில் மோசமான விஷயம் நடக்குதுன்னு நீங்களே குறை சொல்வீங்க, ஆனா புகார் சொல்லவோ சாட்சி சொல்லவும் வரமாட்டீங்க. இதெல்லாம் உங்களுக்கே அசிங்கமா இல்லையா என கூறி பெண்கள் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். ரசிகர்களும்... ராதிகா மீது எந்த ஒரு தவறும் இல்லையே? பின் ஏன் அவர் இந்த விஷயத்தில் ஈடுட்டவர்களை காட்டி கொடுக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பி வருவதால்... இந்த விவகாரம் இவருக்கே ஃபேக் பயர் ஆகியுள்ளது.
என்னது ஒரு படம் 3 வருஷம் ஓடுச்சா! தியேட்டரில் அதிக நாள் ஓடிய மாஸ்டர் பீஸ் தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ