
சினிமா கனவு என்பது இளைஞர்கள் பலருக்கும் ஒரு பொதுவான விஷயம் தான், ஆனால் இளைஞர்கள் தங்கள் மனதில் எண்ணியபடி, அனைவருக்கும் அது அமைத்துவிடுவதில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வதை போல, திறமையோடு சேர்ந்து கொஞ்சம் நேரமும் நல்லா இருந்தால் தான் சரியான வாய்ப்பு கிடைக்கும் போல என்று தான் தோன்றுகிறது. ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள், சினிமா கனவோடு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, கனவுகள் மெய்யாகும் நகரமான சென்னைக்கு வருகின்றனர்.
அப்படி திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்து இன்று தமிழ் திரையுலகின் டாப் நடிகராக உள்ளவர் தான் சிவகார்த்திகேயன். கஷ்டங்கள் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு குடும்ப பின்னனியில் இருந்து வந்த பையன். பிரபல கல்லூரியில் பொறியியல் பட்டம் வென்று, மேற்படிப்பிற்காக சென்னை செல்வதாக கூறிவிட்டு, இங்கு வந்து ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறியவர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக அவருடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க, ரியாலிட்டி ஷோ ஒன்றில் வெற்றியும் பெறுகின்றார்.
அந்த வெற்றி தான், அவர் வாழ்க்கையில் அவருக்கு கிடைக்கு போகும் மாபெரும் வெற்றிக்கான முதல் படி என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. ரியாலிட்டி ஷோவில் கலக்கிய அவர், பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்புகள் கிடைத்தது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரியாலிட்டி ஷோக்கலில் கலக்கி, அதன் பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன், பலருடைய ஃபேவரட் தொகுப்பாளராக மாறினார். தனக்கே உரித்தான ஸ்டைலில் அனைவரையும் கலாய்த்து அரங்கையே அதிக வைக்கும் சிவகார்த்திகேயன் பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த சூழலில் தான் கடந்த 2012ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "மரினா" என்கின்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயணித்த சிவகார்த்திகேயன், அதே ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "3" திரைப்படத்தில் அவருடைய நண்பராக நடித்து அசத்தினார். அந்த 2012ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு மிக மிக முக்கியமான ஒரு ஆண்டாக மாறியது என்றால் அது மிகையல்ல. காரணம் ஒரே ஆண்டில் திரையுலகில் களமிறங்கி, முன்னணி நடிகரோடு நடித்து, அதே ஆண்டு "மனம் கொத்தி பறவை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.
ஏற்கனவே சின்னத்திரை மூலம் பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்ற சிவகார்த்திகேயனுக்கு, இந்த மூன்று முத்தான படங்கள் பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது. அதன் பிறகு சோலோவாக பல படங்களில் கலக்க துவங்கினார்.
தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஜனரஞ்சகமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான "கேடி பில்லா கில்லாடி ரங்கா", 'எதிர்நீச்சல்" "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்று அனைத்து திரைப்படங்களும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை அப்போது தான் முழுமையாக பெற்றார் சிவகார்த்திகேயன் என்றே கூறலாம். அதுவரை தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கௌரவ நடிகராக நடிக்கும் அளவிற்கு புகழை பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே நேரில் அழைத்து பாராட்டும் அளவிற்கு வளர்ந்த சிவகார்த்திகேயன் அப்போது முதல் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட நடிகர் தனுஷை அவதூறாக பேசியதாக சில சர்ச்சைகள் சிவகார்த்திகேயன் மீது எழுந்தது. ரஜினியின் இடத்தை பிடிக்க அவர் விரும்புகிறார் என்று சில காலம் கூறப்பட்ட நிலையில், இப்பொது விஜயின் இடத்தை பிடிக்க அவர் ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் "கோட்" திரைப்படத்தில் விஜயோடு இணைந்து நடித்திருக்கிறார். அதில் "நீங்கள் முக்கியமான ஒரு வேலையாக செல்கிறீர்கள், ஆகவே அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.. இனி இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஒரு வசனத்தை பேசியிருக்கிறார் சிவா. அதாவது விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால், இனி திரை உலகை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிவகார்த்திகேயன் சொல்வது போல இந்த வசனம் அமைந்திருப்பதாக கூறி பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "முதலில் ரஜினியாக மாற வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக ரஜினி முருகன் வேலைக்காரன் என்று திரைப்படங்களில் நடித்து வந்தீர்கள். இப்போது அவரைவிட விஜய் புகழ்பெற்றவர் என்று எண்ணி அவருடைய திரைப்படத்தில் இப்படி ஒரு வசனத்தை பேசி நடித்திருக்கிறீர்கள். ரஜினி அந்த இடத்திற்கு செல்ல 50 ஆண்டு ஆனது, விஜய் இந்த இடத்துக்கு வர 30 ஆண்டுகள் ஆனது. ஆனால் அந்த இடத்தை வெகு சீக்கிரம் பிடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள்".
"குட்டி அஜித், சின்ன தளபதி போன்ற எட்டாத கனவுகளை நீங்கள் இனி நினைத்துப் பார்க்க வேண்டாம். அவை அர்த்தமற்றவை" என்று கூறி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.