
தளபதி நடிப்பில், 1998-ஆம் ஆண்டு இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் வெளியாகி விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் 'காதலுக்கு மரியாதை'. இந்த படத்தின் மூலம், தமிழில் ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஷாலினி ஹீரோயினாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் மட்டும் இன்றி இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படம் 1997-ஆம் ஆண்டு, மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷாலினி நடிப்பில் 'அனியாத்திபிறவு' என்கிற படத்தின் ரீமேக் ஆகும்.
1998-ஆம் ஆண்டு விஜய், நடிப்பில் வெளியான ரொமான்டிக் மியூசிக்கல் டிராமா திரைப்படம் 'நினைத்தேன் வந்தாய்'. இயக்குனர் செல்வ பாரதி இயக்கிய இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக ரம்பா நடிக்க, மற்றொரு நாயகியாக தேவயானி நடித்திருந்தார். இந்த படம், தெலுங்கில் வெளியான 'பெல்லி சண்டடி' என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஹீரோவாக மேகா ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க ராவளி மற்றும் தீப்தி பட்னாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில், 2000-ஆம் ஆண்டு வெளியான 'ப்ரியமானவளே' திரைப்படமும் தளபதி நடித்த ரீமேக் படங்களில் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் செல்வ பாரதி இயக்கி இருந்தார். எசு.ஏ.ராஜ்குமார் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போது வரை பல ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடல்களாக உள்ளன. விஜய்க்கு தந்தையாக இப்படத்தில் SBP நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1996-ஆம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர்யா நடிப்பில் வெளியான 'பவித்ர பந்தம்' என்கிற படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது.
2001-ஆம் ஆண்டு, நேருக்கு நேர் படத்திற்கு பின்னர் சூர்யா மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் ஃபிரெண்ட்ஸ். இயக்குனர் சித்திக் நடித்திருந்த இந்த தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடிக்க, ரமேஷ் கண்ணா, வடிவேலு ஆகியோரின் காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படம் மலையாளத்தில் 1999-ஆம் ஆண்டு ஃப்ரெண்ட்ஸ் என்கிற பெயரிலேயே வெளியானது. இந்த படத்தில் ஜெயராம், முகேஷ், ஸ்ரீனிவாசன், மீனா, திவ்யா உன்னி போன்ற பலர் நடித்திருந்தனர்.
இதே போல் தளபதி நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான 'பத்ரி' திரைப்படமும் விஜய் நடிப்பில் வெளியான ரீமேக் திரைப்படங்களில் ஒன்றாகும். இயக்குனர் பி.ஏ.அருண் பிரசாத் இயக்கிய இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூமிகா சாவ்லா நடிக்க, மோனல் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். ரியாஸ் கான் விஜய்யின் அண்ணனாக நடித்திருந்தார். இப்படம், 1999-ஆம் ஆண்டு தெலுங்கில், பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'தம்முடு' என்கிற படத்தின் ரீமேக்காக்கும்.
மேலும், 2002-ஆம் ஆண்டு.. விஜய் நடிப்பில் வெளியாக இளம் வட்ட ரசிகர்களை கவர்ந்த 'யூத்' திரைப்படமும் தெலுங்கு படத்தின் ரீமேக் படமாகும். ரொமான்டிக் காமெடி படமான இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஷாஹீன் என்பவர் நடித்திருந்தார். மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விவேக்கின் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம்... 'சிறு நவ்வுதோ' படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஹீரோவாக வேணு தொட்டம்புடி நடிக்க ஷாஹீன் தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதே போல் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவிய 'வசீகரா' திரைப்படமும் விஜய் நடித்த ரீமேக் படங்களில் ஒன்று என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இயக்குனர் செல்வ பாரதி இயக்கிய இந்த படத்திற்கு, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படம் தெலுங்கில், வெங்கடேஷ் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு ' நுவ்வு நாக்கு நச்ச்சாவு' என்கிற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது. தமிழில் ஹீரோயினாக சினேகா நடித்திருந்த நிலையில், ஆர்த்தி அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய்க்கு முதல் 50-கோடி வசூலை பெற்று கொடுத்த 'கில்லி' படமும்... தளபதி நடித்த ரீமேக் படங்களில் ஒன்று தான். இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில், மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஒக்கடு' படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் தெலுங்கை விட தமிழில் இப்படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.
தளபதி விஜய்யை வைத்து, இயக்குனர் ரமணா 2006-ஆம் ஆண்டு இயக்கிய ஆக்ஷன் திரைப்படமான ஆதி திரைப்படம் தெலுங்கில் 2005-ஆம் ஆண்டு வெளியான 'அதான்நோக்கடே' என்கிற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில், விஜய் நடித்திருந்த கதாபாத்திரத்தில், நண்டமூரி கல்யாண் ராம் நடித்திருந்தார். சிந்து துலானி ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடிக்க, இப்படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை வைத்து இயக்குனர் சித்திக் இயக்கிய திரைப்படம் காவலன். இந்த படம் மலையாளத்தில் வெளியான Bodyguard படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது. மலையாளத்தில் திலீப் ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். மற்றொரு நாயகியாக மித்ரா குரியன் நடித்திருந்தார். தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் அசின் நடிக்க, மித்ரா குரியன் மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்... விஜய் தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார்.
அதே போல் ஹிந்தியில் சொல்லிடிர் என்கிற பெயரில் 1998-ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தை, பிரபு தேவா விஜய்யை வைத்து ரீமேக் செய்திருந்த திரைப்படம் தான் வில்லு. 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்பு தான் பிரபு தேவா - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. ஹிந்தியில் பாபி தியோல் ஹீரோவாக நடிக்க, ப்ரீத்தி ஜிந்தா நாயகியாக நடித்திருந்தார்.
அதே போல் ஹிந்தியில் சொல்லிடிர் என்கிற பெயரில் 1998-ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தை, பிரபு தேவா விஜய்யை வைத்து ரீமேக் செய்திருந்த திரைப்படம் தான் வில்லு. 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்பு தான் பிரபு தேவா - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. ஹிந்தியில் பாபி தியோல் ஹீரோவாக நடிக்க, ப்ரீத்தி ஜிந்தா நாயகியாக நடித்திருந்தார்.
தளபதி நடித்த மற்றொரு ரீமேக் படம் ஆசாத். தெலுங்கில் 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் வேலாயுதம் என்கிற பெயரில் 2011-ஆம் ஆண்டு ரீமேக் ஆனது. நாகர்ஜுனா தெலுங்கில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். மற்றொரு நாயகியாக ஷில்பா ஷெட்டி நடித்திருந்தார். தமிழில், ஹன்சிகா மோத்வானியும், ஜெனிலியாவும் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதே போல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடித்து 2012-ஆம் ஆண்டு வெளியான 'நண்பன்' திரைப்படம், இந்தியில் 2010-ஆம் ஆண்டு அமீர் கான், மாதவன், ஜோஷி, கரீனா கபூர் நடிப்பில் வெளியான 3 இடியஸ்டஸ் படத்தின் ரீமேக் ஆகும். ஹிந்தியில் இப்படம் வெற்றி பெற்றது போலவே தமிழிலும் சூப்பர்... டூப்பர் வெற்றி பெற்றது. தமிழில் ஸ்ரீகாந்த், ஜீவா விஜய்யின் நண்பராக நடிக்க... இலியானா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் விஜய் நடிப்பில் வெளியான ரீமேக் படங்கள் பெரும்பாலும் அவருக்கு ஹிட் படங்களாக அமைத்துள்ளதையும் பார்க்க முடிகிறது.