கர்ணன்:
இயக்குனர் மாரி செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றிக்கு பின்னர்... நடிகர் தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, லால், நடிகர் நட்டி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொடியன் குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து , எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தையும், இயக்குனர் மாறி செல்வராஜ் வழக்கம்போல தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாகவே இயக்கி இருந்தார். ஒரு தரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும்.. மற்றொரு தரப்பினர் இப்படத்தை வரவேற்றனர்.
இப்படத்தில் இடம்பெற்ற 'பண்டாரதி புராணம்' என்கிற பாடல் குறிப்பிட்ட சாதியை குறிப்பிடுவது போல் இருப்பதாக கூறி... அந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கிய நிலையில், பின்னர் அந்த வார்த்தையை பாடலில் இருந்து தூக்கி விட்டு 'மஞ்சனத்தி புராணம்' என்கிற வார்த்தையோடு இந்த பாடல் வெளியானது.