vuukle one pixel image

தளபதியின் கோட்.. குத்தாட்டம் போட்டு அசத்திய த்ரிஷா - நன்றி சொல்லி தயாரிப்பாளர் வெளியிட்ட "மட்ட" வீடியோ!

Ansgar R  | Published: Sep 7, 2024, 7:48 PM IST

பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "கோட்" திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் சுமார் 126 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய ஹிட்டானது. தொடர்ச்சியாக அந்த திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக, ஒரு நல்ல கமர்சியல் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக மாறி உள்ளது. மேலும் இந்த அளவிற்கு இந்த படம் பேசப்பட காரணம், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பல சிறப்பான கேமியோ கதாபாத்திரங்கள் தான். AI மூலம் கேப்டன் விஜயகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன், தோனி என்று படம் முழுவதும் கேமியோகளின் அணிவகுப்பு இருந்தது.

இதுமட்டுமல்ல, கோட் படத்தில் வரும் மட்ட என்ற பாடலில், பிரபல நடிகை த்ரிஷா ஒரு சூப்பர் டான்ஸ் போட்டிருந்தார். அப்படியே கில்லி பட அப்படி போடு பாடலை பார்த்த ஒரு பீல் ரசிகர்களுக்கு கிடைத்தது. தளபதிக்கு பிரியாவிடை கொடுக்கும் வண்ணம் இந்த பாடலில் த்ரிஷா பங்கேற்ற நிலையில், படக்குழு தங்களது நன்றிகளை த்ரிஷாவிற்கு தெரிவித்துள்ளது.