மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்! சர்ச்சைக்கு குறித்து முதல் முறையாக பேசிய இந்திராஜா கணவர் கார்த்தி

First Published Apr 17, 2024, 4:58 PM IST

ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும், அவரது மருமகன் கார்த்தி வெட்டிங் ரிசப்ஷன் போது, முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'கலக்க போவது யாரு' என்கிற காமெடி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ரோபோ ஷங்கர்.  சின்னத்திரையில் இவருக்கு நிலையான அங்கீகாரம் கிடைத்த பின்னர், தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், காமெடி ரோல்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.
 

அந்த வகையில் நடிகர் தனுஷுடன் மாரி, துல்கர் சல்மானுடன் வாயை மூடி பேசவம், அஜித்துடன் விஸ்வாசம், விஷ்ணு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், என பல ஹிட் படங்களில் நடித்தார். இப்படங்கள் அனைத்துமே ரோபோ திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது.

எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!

ரோபோவை தொடர்ந்து, ரோபோ ஷங்கரின் மகன் இந்திரஜாவும் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த, 'பிகில்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு தன்னுடைய மாமா கார்த்திக்கை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார்.

பின்னர் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தாலும், ஹல்தி, மெஹந்தி, ரிசப்ஷன், வெட்டிங் என மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. பிரபல ஊடகம் ஒன்று இவர்களின் வெட்டிங் உரிமையை கைப்பற்றி, சுவாரஸ்யமான தருணங்கள் பற்றி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!

இந்திரஜா - கார்த்திக் திருமணத்தில் மிகவும் விமர்சனந்திக்கு ஆளான விஷயம் என்றால், அது கார்த்திக் அவரின் மாமியார் பிரியங்காவும் உதட்டில் முத்தம் கொடுத்தது தான். இதை பார்த்து பலர் இவர்களை திட்டி தீர்த்த நிலையில், முதல் முறையாக கார்த்திக் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.
 

அதாவது தனது வெட்டிங் ரிசப்ஷன் நிகழ்ச்சியில்... தன்னுடைய மாமியார் (அக்காவுக்கு) கன்னத்தில் முத்தமிட வந்த போது, திடீர் என அவர் திரும்பியதால் உதட்டில் பட்டுவிட்டது. அதை அவர்களும் புகைப்படம் எடுத்து விட்டனர். இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் என தெளிவாக கூறி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? 50 வயதிற்கு மேல் ஆகியும் அழகு குறையாத 80ஸ் பிரபலங்கள்! ரீ-யூனியன் போட்டோஸ்!

click me!