வரலாற்று சிறப்பு மிக்க வாரணாசியின் மக்களுக்கு சேவை செய்வது பெருமையாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிரதமர் மோடி அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்தே இந்த முறையும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
undefined
இந்தியா கூட்டணியினர் கோழைகள்: பிரதமர் மோடி தாக்கு!
இந்த நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ வாரணாசி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக நான் வேட்புமனு தாக்கல் செய்தேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்தின் மக்களுக்கு சேவை செய்வது பெருமையாக உள்ளது. மக்களின் ஆசியுடன் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த வேகம் வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Filed my nomination papers as a candidate for the Varanasi Lok Sabha seat. It is an honour to serve the people of this historic seat. With the blessings of the people, there have been remarkable achievements over the last decade. This pace of work will get even faster in the… pic.twitter.com/QOgELYnnJg
— Narendra Modi (@narendramodi)குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையத்திலிருந்து அவர் போட்டியிடுவது இது மூன்றாவது முறையாகும்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: விழாக்கோலம் பூண்ட வாரணாசி!