வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: விழாக்கோலம் பூண்ட வாரணாசி!

உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்துள்ளார்

Loksabha election 2024 Prime Minister Narendra Modi filed his nomination from Varanasi smp

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரதமர் மோடி அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்தே இந்த முறையும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.  வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார். தொடர்ந்து அங்குள்ள கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி, வாரணாசி மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் வாரணாசி சென்றுள்ளனர். பிரதமர் மோடி வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு அங்கு நடைபெறவுள்ள பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்கள் என தெரிகிறது.

சிறுநீரக புற்றுநோயால் முன்னாள் முதல்வர் மறைவு.. பிரதமர் இரங்கல்.. யார் இந்த சுஷில் குமார் மோடி?

அதேசமயம், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான பாஜக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். வாரணாசி தெருக்கள் முழுவதும் மோடியின் புகழ் முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. வாரணாசியில் பிரதமர் போகும் இடங்களில் எல்லாம் பாஜக தொண்டர்கள் "ஆப் கி பார், சார்சோ பார்" (400 இடங்களில் வெற்றி) என முழக்கமிட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios