ஸ்விக்கி டெய்லி (Swiggy Daily) மூலம் வீட்டில் சமைத்தது போன்ற சுவையுடன் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. இந்தச் சேவை பயனர்களுக்கு மலிவு விலையில் சத்தான உணவைக் கொடுப்பது மட்டுமின்றி வீட்டுச் சமையல்காரர்களையும் ஆதரிக்கிறது.
பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, வீட்டு உணவு விநியோக சேவையான ஸ்விக்கி டெய்லியை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான, வீட்டில் சமைத்த உணவை வீடு தேடி வந்து வழங்குகிறது.
ஸ்விக்கி இந்தச் சேவையை 2019 இல் அறிமுகப்படுத்தியது. ஆனால் கோவிட் லாக்டவுன்களின் போது, ஆர்டர்கள் எண்ணிக்கை குறைந்ததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. ஸ்விக்கி டெய்லி வெவ்வேறு சந்தா ஆப்ஷன்களை வழங்குகிறது. பயனர்கள் மூன்று நாட்கள் முதல் ஒரு மாதம் வரையிலான திட்டங்களைத் தேர்வுசெய்ய முடியும்.
undefined
மலிவு விலையில் ஆரோக்கியமான வீட்டு உணவைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்விக்கியின் இந்த சேவை கைகொடுக்கிறது.
ஸ்விக்கி டெய்லி என்றால் என்ன?
ஸ்விக்கி டெய்லி சேவை அதன் பயனர்கள் வீட்டு சமையல் கலைஞர்கள் அல்லது உள்ளூர் சமையலறைகளில் தயாரிக்கப்படும் தினசரி உணவுகளுக்கு வாடிக்கையாளர்களை உருவாக்குகிறது. பயனர்கள் சைவம், அசைவ என இரண்டு வகைகளில் பல்வேறு வகையான உணவுகளில் இருந்து விருப்பமானதைத் தேர்வு செய்யலாம். மூன்று நாட்கள் முதல் ஒரு மாதம் வரை சந்தா திட்டத்தில் சேரலாம்.
ஸ்விக்கி டெய்லி மூலம் வழங்கப்படும் உணவுகள் புதிய பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய முறையில் வீட்டில் சமைத்தது போன்ற சுவையுடன் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. இந்தச் சேவை பயனர்களுக்கு மலிவு விலையில் சத்தான உணவைக் கொடுப்பது மட்டுமின்றி வீட்டுச் சமையல்காரர்களையும் ஆதரிக்கிறது.
ஸ்விக்கி டெய்லியும் சொமாட்டோ எவ்ரிடேயும் ஒரே மாதிரியானவை. இருவரும் வீட்டில் சமைத்த உணவை வீட்டு வாசலில் டெலிவரி செய்யக்கூடிய சேவையை வழங்குகிறார்கள். இரண்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு சந்தா செலுத்தி, வெஜ் மற்றும் நான் வெஜ் உணவுகளில் விருப்பமானதை வாங்கிக்கொள்ளலாம்.
UPI மூலம் பணம் பறிக்கும் சைபர் கிரிமினல்ஸ்! பேமெண்ட் செய்யும்போது ஒரு செகண்ட் இதை செக் பண்ணுங்க!
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி? நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?