ஒன்றிணையும் ஆப்பிள் - கூகுள்! புளூடூத் டிராக்கர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேற வழி இல்ல!

By SG Balan  |  First Published May 14, 2024, 12:54 PM IST

ஏர்டேக்குகள் ஆரம்பத்தில் சாவிகள் போன்ற தொலைந்து போன பொருட்களைக் கண்டறிய உதவும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக சிலர் அவற்றை தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தத் தொடங்கினர்.


புளூடூத் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களை தேவையற்ற கண்காணிப்பில் இருந்து பாதுகாக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

இந்த வாரம் முதல், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் புளூடூத் டிராக்கர்கள் அவர்களைப் பின்தொடர்வது போல் தோன்றினால் நோட்டிஃபிகேஷன்களைப் பெறுவார்கள். ஆப்பிளின் ஏர் டேக்குகள் போன்ற டிராக்கர்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் கூகுள் - ஆப்பிள் இணைந்துள்ள கூட்டு முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

Tap to resize

Latest Videos

கூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து தேவையற்ற லொகேஷன் டிடக்டர்களைக் கண்டறியும் பணியில் ஒத்துழைக்கின்றன. இது சாப்ட்வேர் அப்டேட் மூலம் செயல்படுத்தப்படும். ஐபோன்களுக்கான iOS 17.5 மற்றும் ஆண்டிராய்டு 6.0 அல்லது அதற்குப் பிறகான வெர்ஷன்களில் இந்த நோட்டிஃபிகேஷன் சேவை செயல்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் இது இருக்கணும்! ஜுஜூபி விலையில் சோலார் வயர்லெஸ் சிசிடிவி கேமரா!

அறிமுகமில்லாத புளூடூத் டிராக்கிங் சாதனம் நீண்ட நேரம் உங்களுடன் பயணிப்பது கண்டறியப்பட்டால், மொபைலில் நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கப்படும். டிராக்கர் எந்த பிராண்டாக இருந்தாலும் இந்த எச்சரிக்கைச் செய்தி தோன்றும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டேக்ஸ் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பல சம்பவங்களுக்குப் பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, புளூடூத் கண்காணிப்புக்கான தீர்வை உருவாக்க ஆப்பிள் மற்றும் கூகிள் இணைந்து செயல்பட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தன.

ஏர்டேக்குகள் ஆரம்பத்தில் சாவிகள் போன்ற தொலைந்து போன பொருட்களைக் கண்டறிய உதவும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக சிலர் அவற்றை தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தத் தொடங்கினர்.

UPI மூலம் பணம் பறிக்கும் சைபர் கிரிமினல்ஸ்! பேமெண்ட் செய்யும்போது ஒரு செகண்ட் இதை செக் பண்ணுங்க!

click me!