Parenting Tips : குழந்தைக்கு நீச்சல் சொல்லி கொடுக்கீங்களா..? அப்ப 'இந்த' விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

First Published Apr 30, 2024, 2:49 PM IST

 குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை குறித்து தெரிந்து கொள்வோம். 

கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது குழந்தைகள் பள்ளி விடுமுறையில் இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுகொடுப்பதில் மும்முரமாக இருப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது இந்த கட்டுரையில், குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை குறித்து தெரிந்து கொள்வோம். 

சிறு குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது,   கண்டிப்பாக நீச்சல் கிட் உபயோகப்படுத்த வேண்டும். நீச்சல் உடைகள்,  கண்ணாடிகள் மற்றும் பிற பாதுகாப்பு பொருட்களும் குழந்தைகளுக்கு வாங்குங்கள். இவற்றை பயன்படுத்தி குழந்தைகள் நீந்தினால் எந்த பிரச்சனையும் வராது.

சிறு குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது அவர்களுக்கு லைஃப் ஜாக்கெட் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அது அவர்களுக்கு மிகவும் முக்கியம். லைஃப் ஜாக்கெட்டுகளின் உதவியுடன் குழந்தைகளுக்கு ஆபத்து தடுக்கப்படும் மற்றும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். லைஃப் ஜாக்கெட்டுகளை போட்ட பிறகே நீந்தச் சொல்லுங்கள். 

இதையும் படிங்க:  சுட்டெரிக்கும் கோடை வெயில்; திருச்செந்தூரில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை

உங்கள் குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்தால் அவர்களுக்கு குழாய்களை வாங்குங்கள். ஏனெனில் அவற்றின் உதவியால் அவர்கள் தண்ணீரில் மூழ்க மாட்டார்கள். குறிப்பாக, அவற்றின் உதவியுடன் அவர்கள் தாங்களாகவே நீந்தக் கற்றுக் கொள்வார்கள். 

இதையும் படிங்க: Accident: நீச்சல் பயிற்சியின்போது விபரீதம் தாய், 2 குழந்தைகள் பலி; நொடிப்பொழுதில் சிதைந்த குடும்பம்

இவற்றை நினைவில் வையுங்கள்:
உங்கள் குழந்தைகளை ஒருபோதும் தனியாக நீந்த விடாதீர்கள். நீச்சல் அடிக்கும்போது அவர்கள் பக்கத்தில் இருங்கள். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பில் எப்போதும் கவனமாக இருங்கள். நீச்சல் குளங்களின் விதிகளை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். குறிப்பாக, அவர்களை தண்ணீரை விழுங்கக் கூடாது என்றும் தொடக்கத்திலேயே நீருக்கடியில் நீந்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!