திருமண உறவை மேம்படுத்த உதவும் மேஜிக் டிப்ஸ் இதோ.. தம்பதிகளே கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

First Published Apr 6, 2024, 3:09 PM IST

திருமண உறவை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண உறவு என்பது எப்போது மகிழ்ச்சியாகவே இருக்காது. அதில் அவ்வப்போது சண்டைகளும் பிரச்சனைகளும் எழும். சண்டைகள், சமாதானம் என ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது தான் திருமண உறவு. ஆனால் உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டை வருகிறதா? அல்லது நீங்கள் அல்லது உங்கள் துணை  அடிக்கடி ஒருவருக்கொருவர் எதிர்மறையான குணநலன்களைக் காண்கிறீர்களா?

கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் எந்தவொரு உறவிலும் இயல்பானது தான் என்றாலும், ஆரோக்கியமான உறவுகளில்  தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் இயல்பு நிலைக்கு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதுதான் முக்கியம்.

இவை தவிர, 5:1 என்ற மேஜிக் விகிதமும் உங்கள் துணையுடன் உங்கள் உறவை மேம்படுத்த உதவும். ஆம். உண்மை தான். 1970களில், உளவியலாளரும், உறவுகள் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ராபர்ட் லெவன்சன் மற்றும் டாக்டர் ஜான் காட்மேன் ஆகியோர் தம்பதிகள் தங்கள் மோதல்களை எவ்வாறு தீர்க்கிறார்கள் என்பது பற்றி ஒரு ஆய்வை நடத்தினர்.

தம்பதிகள் தங்கள் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை 15 நிமிடங்களுக்குள் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் மூலம், ஒரு ஜோடியின் உறவு நீண்டகாலம் நீடிக்குமா அல்லது அவர்கள் பிரிந்து செல்வார்களா என்பதை 90 சதவீத துல்லிய விகிதத்துடன் அவர்களால் கணிக்க முடிந்தது.. இந்த ஆய்வின் மூலம், ஆரோக்கியமான உறவுகளில் பெரும்பாலான தம்பதிகள் கடைப்பிடிக்கும் 5:1 விகிதத்தின் முடிவுக்கு வந்தனர்.

சரி.. ஆரோக்கியமான உறவுகளில் 5:1 விகிதம் என்றால் என்ன? உறவுகளில் உள்ள 5:1 விகிதம் "மேஜிக் விகிதம்" என்றும் அழைக்கப்படுகிறது. அதன் படி, ஒரு காதல் உறவு செழித்து நிலையானதாக இருக்க, மோதல்கள் அல்லது அவர்களின் அன்றாட தொடர்புகளின் போது தம்பதிகளுக்கு இடையே நேர்மறை மற்றும் எதிர்மறையான தொடர்புகள் குறைந்தது 5:1 விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது ஒரு தம்பதியினருக்கு இடையிலான ஒவ்வொரு எதிர்மறையான கருத்து அல்லது மோதலுக்கும், அவர்கள் சண்டையை சமப்படுத்த குறைந்தபட்சம் ஐந்து நேர்மறையான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இவை துணையை பாராட்டுவது, உடல் பாசம், சரிபார்த்தல், நகைச்சுவை, கருணைச் செயல்கள் அல்லது ஆதரவான சைகைகள் போன்ற வடிவங்களில் இருக்கலாம். காட்மேனின் ஆராய்ச்சியின்படி, நேர்மறையை விட எதிர்மறை தொடர்புகளின் விகிதம் மிக அதிகமாக இருக்கும் உறவுகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சிதைந்துவிடும் என்று முடிவு செய்தனர்.. எனவே, ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கு ஒருவர் தனது துணை உடனான நேர்மறையான தொடர்புகளின் அளவை சமப்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

click me!