Relationship Tips : தம்பதிகள் செய்யும் இந்த தவறுகள் திருமண உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்..

First Published Mar 21, 2024, 5:13 PM IST

உறவில் செய்யக்கூடாத சில தகவல்தொடர்பு தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண உறவில் மகிழ்ச்சியையும் பிணைப்பையும் அதிகரிக்க தகவல் தொடர்பு அவசியம். சரியான தகவல் தொடர்பு இல்லை எனில் அதுவே உறவில் விரிசலுக்கு காரணமாக அமையும். உறவில் செய்யக்கூடாத சில தகவல்தொடர்பு தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

This mistake made in the early days of dating is the reason for being single

அந்த வகையில் உறவில் பலர் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, தங்கள் துணையிடம் தெளிவாக கேட்காமல் தாங்களாகவே யூகிக்கின்றனர். இதனால் ​​உண்மையைத் தாண்டி சிந்திக்க அனுமதிக்கிறோம். அது உறவுக்கு தீங்கு விளைவிக்கும்.

எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளை சரிபார்க்க வேண்டும். கடினமான காலங்களில் உங்கள் துணையை ஆதரிக்க வேண்டும், அவர்களின் கருத்துகள் அல்லது ஆசைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் துணை மீது பழி போடுவதற்கு பதிலாக, நாம் செய்த தவறுகளுக்கு பொறுப்பேற்கத் தொடங்க வேண்டும். இதன் மூலம் உங்கள் துணைக்கு உங்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் அதிகரிக்கும்.

ஒரு உறவில் பதிலளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் துணைக்காக தரமான நேரத்தை செலவிடுதன் மூலம் ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ளலாம்.  

ஒவ்வொரு உறவும் கடினமான உரையாடல்களின் நியாயமான பங்கைக் கொண்டுள்ளது. கடினமான விஷயங்களை பேசாமல் தவிர்ப்பது அல்லது புறக்கணிப்பது அல்லது பேசாமல் இருப்பது விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

click me!