நடிகை ரம்யா கிருஷ்ணன், அடுப்பே இல்லாமல் சமைத்த டேஸ்டான உணவு குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
ஹீரோயினாக மட்டுமின்றி வில்லி வேடங்களிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது படையப்பா தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் நீலாம்பரி என்கிற கேரக்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடித்து அசத்தி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். அப்படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையடுத்து கமல்ஹாசனுடன் பஞ்ச தந்திரம் படத்தில் மேகியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் பல்வேறு சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் ஆனது. தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இதையும் படியுங்கள்... 43 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி... இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?
திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார் ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் சன் டிவியில் இவர் நடித்த தங்கம், வம்சம் ஆகிய சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதோடு, அவருக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.
பின்னர் குயின் என்கிற வெப்தொடரில் நடித்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது. ஆவக்காய் பச்சடி செய்யும் வீடியோவை ரம்யா கிருஷ்ணன் பதிவிட்டு இருக்கிறார். அடுப்பே இல்லாமல் அவர் சமைப்பதை பார்த்த நெட்டிசன்கள் பார்க்கும் போதே எச்சில் ஊறுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணனின் இந்த வீடியோவுக்கு லைக்ஸும் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... Jawan : ஹாலிவுட் படங்களுடன் போட்டி... ஆஸ்கருக்கு நிகரான விருதுக்கு தேர்வான அட்லீயின் ஜவான் - குவியும் பாராட்டு