Relationship Tips : ஆண்கள் இரவில் நிர்வாணமாக தூங்கினால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்குமா..?

First Published Apr 11, 2024, 10:00 PM IST

ஆண்கள் இரவில் இறுக்கமான உள்ளாடைகளை அணியாமல் நிர்வாணமாக தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

பொதுவாகவே, ஆண்களுக்கு விந்தணுக்களில் வெப்பநிலை அதிகரிப்பதால், கருவுறுதலில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இரவு தூங்கும் போது மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்தால், அது உடல் பாகங்களில் வெப்பத்தை உண்டாக்கும். மேலும் அதிகப்படியான வெப்ப உற்பத்தி காரணமாக, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் இரண்டும் மோசமடையும்.
 

இறுக்கமான ஆடைகளை அணியாதீர்!
ஆண்கள் இரவில் தூங்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது. அதுமட்டுமின்றி, பகலில் கூட இறுக்கமான பேன்ட் அல்லது உள்ளாடைகளை அணியக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் அது உங்கள் விந்தணு எண்ணிக்கையை மிகவும் மோசமாக பாதிக்கும்.

நிர்வாணமாக தூங்குவது நல்லது: அதுபோல, இறுக்கமான உடையில் தூங்குவது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்குமா என்பது குறித்து எந்த ஆராய்ச்சியும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இது உடலுக்கு பல நன்மைகளை தருவதாக பல ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக, விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கு இது கூட காரணம் தான். எனவே, நிர்வாணமாக தூங்கினால் உடல் ஓய்வெடுக்கும். இதனால்
உங்கள் உடல் தளர்வாக இருப்பதால், உங்களது விந்தணு எண்ணிக்கையும் சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியமான விந்தணுக்கள்: நிர்வாணமாக உறங்கினால் உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைக்க உதவும். அதுமட்டுமின்றி, இது உங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

நிர்வாணமாக தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்:

ஆண்கள் இரவில் நிர்வாணமாக தூங்கினால், ஈஸ்ட் தொற்று அபாயத்தைக் குறைக்கும் மற்றும் யோனி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆண்கள் இரவில் நிர்வாணமாக தூங்குவது, உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும்.

ஆண்கள் இரவில் நிர்வாணமாக தூங்கினால், அது உங்கள் முழு உடலையும் தளர்த்தும் மற்றும் உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

ஆண்கள் இரவில் நிர்வாணமாக தூங்கினால், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படும் மற்றும் பல நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

click me!