Vishal : திருமணம் செய்யச்சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்... ஆனா என்னோட முடிவு இதுதான் - விஷால் ஓபன் டாக்

First Published Apr 21, 2024, 11:47 AM IST

பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருவதாக கூறியுள்ள விஷால், தன்னுடைய முடிவு பற்றியும் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

Actor Vishal

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். அவர் நடிப்பில் தற்போது ரத்னம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ஹரி இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள ரத்னம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஏப்ரல் 26-ந் தேதி ரத்னம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Vishal

ரத்னம் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், சிங்கிளாக வெளிவருகிறது ரத்னம். அப்படத்தின் புரமோஷன் பணிகளின் போது தன்னுடைய திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார் விஷால்.

இதையும் படியுங்கள்... Thalapathy Vijay : தேர்தல் விதிகளை மீறினாரா விஜய்? தளபதி மீதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

vishal movie rathnam

அதுபற்றி அவர் கூறியதாவது : “எப்போ கல்யாணம் பண்ணிக்க போறனு கேட்டு என் பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர். முதலில் ஆர்யாவுக்கு திருமணம் ஆனது எனது திருமணம் நடக்கும் என சொன்னேன். ஆர்யா, சாயிஷாவை கல்யாணம் பண்ணி குழந்தையே பெற்றுவிட்டான். பின்னர் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்துகொள்வேன் என கூறினேன்.

vishal marriage

திருமணம் என்பது சாதாரண விஷயமல்ல. நான் திருமணத்தை தள்ளிப்போடுவதால் எனக்கு அதன் மீது வெறுப்பு இருப்பதாக அர்த்தமில்லை. என் தாய் திருமணம் பற்றி கேட்டபோது, இன்னும் சல்மான் கான், பிரபாஸ் போன்றவர்களே திருமணம் செய்துகொள்ளவில்லை, அவர்களுக்கு முடிந்த பின்னர் தான் என் திருமணம் நடக்கும் என கூறிவிட்டேன்.

vishal says about marriage

நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியின் தீவிர முயற்சியால் இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால், நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் என்னுடைய திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்று எனக்கே தெரியல. ஆனா கண்டிப்பா எனக்காக காத்திருப்பாள் என நம்புறேன் என்று விஷால் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Reshma : தவறான சர்ஜரியால் உதடு பெரிதாகி முகம் மாறிவிட்டதா? சர்ச்சை கமெண்ட்டுகள் குறித்து மனம்திறந்த ரேஷ்மா

click me!