நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை நிராகரித்தது ஏன்? ரம்பா சொன்ன சீக்ரெட்

First Published Dec 24, 2023, 12:56 PM IST

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரம்பா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது பற்றி பேசி இருக்கிறார்.

Rambha

1990-களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்பா. ஆந்திராவை சேர்ந்தவரான இவரது ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமி. இவர் தெலுங்கில் அறிமுகமான ஆ ஒக்கடி அடக்கு என்கிற திரைப்படத்தில் ரம்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அந்த கதாபாத்திர பெயரான ரம்பாவை தன் பெயராக வைத்துக்கொண்டு தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.

Actress Rambha

இதையடுத்து தமிழில் நடிகை ரம்பாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் சுந்தர் சி தான். அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ரம்பா. அப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதல் படமே மாஸ் வெற்றியை ருசித்ததால் அடுத்தடுத்து ரம்பாவுக்கு கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு குவிந்தது. இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து டாப் நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

Rambha rejected ajith movie

நடிகை ரம்பாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு இந்திரகுமார் என்பவருடன் திருமணமானது. கல்யாணம் முடிந்த கையோடு சினிமாவை விட்டு விலகிய ரம்பா, தன் கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகளும் உள்ளன. சினிமாவில் சுமார் 13 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ரம்பா, விரைவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் முனைப்பில் உள்ளார். அதற்கான கதைகளையும் கேட்டு வருகிறார் ரம்பா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

vaalee movie

நடிகை ரம்பா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது தான் அஜித் படத்தை மிஸ் பண்ணியது பற்றி பேசி இருக்கிறார். அதன்படி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வாலி திரைப்படத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது ரம்பா தானாம். அப்படத்தில் சிம்ரன் நடித்துள்ள ரோலில் நடிக்க தான் ரம்பாவை முதன்முதலில் அணுகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா, அதன்பின்னர் போட்டோஷூட்டும் நடத்தினார்களாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் தனக்கு சில குழப்பங்கள் இருந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் ரம்பா.

Rambha reject vaalee movie

இருப்பினும் அந்த படத்தை தவறவிட்டதற்காக தான் வருத்தப்படவில்லை என கூறியுள்ள ரம்பா, அந்த கேரக்டரை சிம்ரன் மிக அழகாக பண்ணி இருந்ததாகவும், தான் நடித்திருந்தால் கூட அந்த அளவுக்கு நடித்திருக்கமாட்டேன். அதனால் தனக்கு வருத்தமில்லை எனக் கூறிய சிம்ரன், வாலி படத்தில் மிஸ் ஆனாலும் ராசி படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டதாக கூறினார்.

இதையும் படியுங்கள்... உரிச்சி வச்ச ஸ்ட்ராபெரி பழம் போல்... ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்

click me!