
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியில் இருந்து பொறியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள உதவி இயக்குநர், துணை ஆணையர், துணை இயக்குநர், உதவி கட்டுப்பாட்டாளர், பயிற்சி அலுவலர், உள்துறை வடிவமைப்பு மற்றும் அலங்காரம், பயிற்சி அலுவலர் உள்ளிட்ட 17 பதவியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பிப்போர் பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். பதவிக்கு ஏற்றவாறு 30 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் உள்ள ஆண், பெண் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி3 முதல் 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
தகுதியானோர் https://upsc.gov.in அல்லது http://www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
வருகின்ற மே 16ம் தேதி அதாவது இன்றுடன் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.