நிச்சயதார்த்தத்தோடு நின்றுபோன திருமணம்... ராஷ்மிகாவோடு இன்னும் தொடர்பில் இருக்கிறேன்- ரக்‌ஷித் ஷெட்டி உருக்கம்

First Published Feb 13, 2024, 11:24 AM IST

நடிகை ராஷ்மிகா மந்தனாவுடனான திருமணம் பாதியில் நின்றுபோன பின்னரும் அவருடன் தொடர்பில் இருப்பதாக நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி கூறி இருக்கிறார்.

Rakshit Shetty and Rashmika Mandanna

பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் கிரிக் பார்ட்டி. கன்னட படமான இதில் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது ராஷ்மிகாவுக்கும், ரக்‌ஷித் ஷெட்டிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டி ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

Rakshit Shetty ex lover Rashmika Mandanna

இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரது திருமண நிச்சயதார்த்தமும் கடந்த 2017-ம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் அதன்பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இவர்களது திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்றுபோனது. இந்த பிரிவுக்கு பின்னர் ராஷ்மிகாவின் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது. அவர் தெலுங்கில் அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

இதையும் படியுங்கள்... ராஷ்மிக்காவின் Deep Fake வீடியோ.. உருவாக்கியது ஏன்? கைதான 24 வயது நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!

Rakshit Shetty, Rashmika engagement

தற்போது கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். மறுபுறம் ரக்‌ஷித் ஷெட்டி, ராஷ்மிகாவை பிரிந்த பின்னர் சுமார் 2 ஆண்டுகள் சினிமாவை விட்டே விலகிவிட்டார். அந்த சமயத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டீ ஆக்டிவேட் செய்துவிட்டு தனிமையில் இருந்தார். அதன்பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு தற்போது கன்னடத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

Rakshit Shetty about Rashmika Mandanna

இந்த நிலையில், கன்னட ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரக்‌ஷித் ஷெட்டி தான் தற்போதும் ராஷ்மிகா உடன் தொடர்பில் இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய கனவு இருந்ததாகவும், அதை அவர் அடைந்துவிட்டதாகவும் கூறிய ரக்‌ஷித் ஷெட்டி, அவருக்கான அங்கீகாரத்தை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். தன் முன்னாள் காதலி குறித்து ரக்‌ஷித் ஷெட்டி பேசிய அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ராஷ்மிகாவுடன் அடுத்த மாதம் நிச்சயதார்த்தமா? மௌனம் கலைத்த விஜய் தேவரகொண்டா..

click me!