சிவகங்கையில் நண்பனை கொன்று புதைத்துவிட்டு பணத்தை பங்குபோட்ட குடிகார கும்பல்

By Velmurugan s  |  First Published May 14, 2024, 7:03 PM IST

தேவகோட்டை அருகே குடிபோதையில் நண்பனை குத்திக் கொன்று கண்மாயில் புதைத்த நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 38). இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தனது நண்பரான பூங்கொடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சொர்ணம் மகன் செல்வம் என்ற செல்வகுமார் (34) அழைத்ததின் அடிப்படையில் முத்து நாட்டு கம்மாய் பகுதிக்கு தேவகோட்டையில் இருந்து தனிநபராக டாட்டா ஏசி வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அங்கு செல்வகுமார் நண்பர்கள் சின்ன கோடகுடி கிராமத்தைச் சேர்ந்த  ராஜா (32) மேலும் நான்கு நபர்கள் மது அருந்த தயாராக இருந்துள்ளனர். பாண்டியராஜன் மற்றும் செல்வகுமார் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் உடன் மது அருந்தி உள்ளார். மது போதையில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு அடிதடியாக மாறியதில் பாண்டியராஜன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Latest Videos

undefined

புகார் அளித்த நபர்களை குடும்பத்தோடு காலி செய்ய துடிக்கும் கஞ்சா கும்பல் - கோவையில் பரபரப்பு

உயிரிழந்த பாண்டியராஜனின் உடலை அந்தப் பகுதி கண்மாய்க்குள் புதைத்து விட்டு பாண்டியராஜன் எடுத்து வந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம் அனைவரும்  தப்பிச்சென்று கோயம்புத்தூரில் வாகனத்தை விற்பனை செய்துவிட்டு பணத்தை பங்கிட்டு கொண்டு அனைவரும் தலைமறைவு ஆகிவிட்டனர். பாண்டியராஜனை காணாத அவரது உறவினர்கள் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

தஞ்சையில் உயிரிழந்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அனைவரையும் கண்கலங்கச் செய்த பெற்றோர்

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாண்டியராஜன் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனம் கோயமுத்தூரில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் டாட்டா ஏசி வாகனத்தை யார் விற்பனை செய்தார் என்று கண்டறிந்து குற்றவாளிகள் கண்டறியப்பட்டு இன்று ராஜா, செல்வகுமார் இருவரையும் கைது செய்து பாண்டியராஜனை புதைத்த இடத்தில் வட்டாட்சியர் அசோக்குமார் முன்னிலையில் அரசு மருத்துவர் செந்தில்குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இவ்வழக்கு சம்பந்தமான மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நண்பனை மது போதையில் கொலை செய்து கண்மாய்க்குள் புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!