
சென்னையில் பிறந்த நடிகர் கார்த்திக் குமார், கடந்த 2000 ஆவது ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "அலைபாயுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல படங்களில் அவர் நடித்து வந்தாலும், தான் "டைப் காஸ்ட்" செய்யப்படுவதாக கூறி பெரிய அளவில் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.
இறுதியாக நயன்தாராவின் அன்னப்பூரணி படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பொழுது தனக்கு மிகவும் விருப்பமான ஸ்டாண்ட் அப் காமெடியை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார் கார்த்திக் குமார். கடந்த 2005 ஆம் ஆண்டு அவர் பிரபல பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார்.
சுமார் 12 ஆண்டுகள் அவர்கள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் அண்மையில் அவரது முன்னாள் மனைவி சுசித்ரா வெளியிட்ட ஒரு தகவலின்படி தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் தனது இணைய முகவரியின் கடவுச்சொல்லை திருடி அதன் மூலம் "சுச்சி லீக்ஸ்" என்ற ஒரு விஷயத்தை வெளியிட்டார் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தனது கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் இணைந்து குடித்துவிட்டு ஒரு அறைக்குள் செல்வதை தான் கண்டதாகவும், அந்த அறைக்குள் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதும் எனக்கு தெரியும் என்று அவர் பரபரப்பு தகவல் ஒன்றை அண்மையில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
அதேபோல எனக்கு திருமணமான இரண்டு ஆண்டுகளில், கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்து விட்டது என்றும், ஆனால் இது எங்கள் தாய் தந்தையர்கள் சேர்ந்து நடத்தி வைத்து திருமணம் என்பதால் தான் பொறுமையாக இருந்ததாகவும். அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த தகவலுக்கு தனது பதிலை தற்பொழுது சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்.. "நான் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தேன் என்றால், நிச்சயம் அதை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் இல்லை".
"நான் ஒரு ஓரினசேர்கையாளர்களுக்காக நடக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கலந்து கொள்வேன். ஆனால் அதற்கு நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்பது அல்ல, அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு நல்ல மனிதனாக இருந்தாலே போதும்" என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.