கவர்ச்சியில் தூள் கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் மருமகள் மிர்ணா... வைரலாகும் கார்ஜியஸ் கிளிக்ஸ்

First Published Oct 20, 2023, 12:33 PM IST

நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமான நடிகை மிர்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Mirnaa

அதிதி மேனனாக சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்து தற்போது மிர்ணா மேனனாக தன் பெயரை மாற்றி படங்களில் பிசியாக நடித்து வருபவர் தான் மிர்ணா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் ஹீரோவாக நடித்த அபி சரவணனுக்கும் மிர்ணாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Mirna menon

இதையடுத்து மலையாளத்தில் மோகன்லாலின் பிக்பிரதர் படம் மூலம் அறிமுகமான மிர்ணாவுக்கு அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் கிரேஸி ஃபெலோ என்கிற படம் மூலம் தெலுங்கில் காலடி எடுத்து வைத்த மிர்ணா, அங்கு உக்ரம் என்கிற படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதில் அல்லரி நரேஷுக்கு ஜோடியாக நடித்தார் மிர்ணா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Jailer fame Mirnaa

பின்னர் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்த மிர்ணாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில் நடிகர் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் மிர்ணா. படத்தில் அவருக்கு பெரியளவில் டயலாக்குகள் இல்லாவிட்டாலும் எமோஷனிலேயே ஸ்கோர் செய்துவிட்டு சென்றார். ஜெயிலர் படத்துக்கு பின்னர் நடிகை மிர்ணாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன.

Mirnaa photoshoot

சினிமாவை போல் சோசியல் மீடியாவிலும் பிசியாக உள்ள மிர்ணா, அதில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் மிர்ணா. அந்த வகையில் தற்போது ஸ்டிராப் லெஸ் மாடர்ன் உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்து நடிகை மிர்ணா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. 

இதையும் படியுங்கள்... நடிகை ராதா மகள் கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

Latest Videos

click me!