மீனத்தில் ராகு குரு சேர்க்கை.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி அமோக காலம்..

First Published Apr 13, 2024, 7:00 AM IST

மீன ராசியில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் இந்த சேர்க்கை நிகழ்ந்துள்ளது

ஜோதிட சாஸ்திரத்த்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றன. அப்படி பெயர்ச்சியாகும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம், மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதியாவார். 

புதன் கிரகம் ஏப்ரல் 9-ம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வரும் நிலையில் தற்போது புதன் கிரகமும் நுழைந்துள்ளார். இதனால் மீன ராசியில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் இந்த சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையால் 3 ராசிகள் தொழில் ரீதியாக நல்ல பலன்களை பெறப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Cancer daily rashifal

கடகம் :
கடக ராசியின் 9-வது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இதனால் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக கிடைக்காமல் போன பதவி உயர்வு இந்த காலக்கட்டத்தில் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். 

கும்பம் : 

கும்ப ராசியின் 11-வது வீட்டில் புதன் ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறந்த செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும்.

Image: Pexels

துலாம் :

துலாம் ராசியின் 6-வது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.  இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  சட்ட ரீதியான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திடீர பண வரவு இருக்கும். சிலருக்கு மாமியார், மாமனார் வழியில் பண உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

click me!