குளு குளு வெண்பனி போல... காதலர் தினத்தை வெளிநாட்டில் கொண்டாடும் பிரியா பவானி சங்கர் - வைரலாகும் போட்டோஸ் இதோ

First Published Feb 14, 2024, 10:29 AM IST

காதலர் தினத்தை கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

priya bhavani shankar

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பின்னர் வெள்ளித்திரைக்கு தாவியவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் மேயாத மான். ரத்னகுமார் இயக்கிய இப்படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா. இதையடுத்து மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அவர், பின்னர் கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய் ஜோடியாக மாஃபியா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.

priya bhavani shankar photos

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள பிரியா பவானி சங்கர், தற்போது கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது டிமாண்டி காலனி 2 படம் உருவாகி உள்ளது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல் ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ரத்னம், ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இதையும் படியுங்கள்... மாடர்ன் பியூட்டி.. ரசிகர்களின் கியூட்டி.. நடிகை பிரியா பவானி சங்கருக்கு பிறந்தநாள் - அவர் Net Worth எவ்வளவு?

priya bhavani shankar lovers day clicks

இப்படி பிசியான ஹீரோயினாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வருகிறார். தற்போது சினிமாவில் படு பிசியாக இருப்பதால் திருமணம் செய்துகொள்ளாமல் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் பிரியா பவானி சங்கர், தன்னுடைய காதலுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

priya bhavani shankar valentines day photos

அந்த வகையில் தற்போது சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு பனி படர்ந்த சாலையில் நின்றபடி விதவிதமாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...திருமண விழா.. மனமக்களோடு Cute Pose - சூப்பர் சேலையில் சொக்கவைக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்!

click me!