லியோவுக்கு முந்தைய படங்கள் விஜய்க்கு மாஸ் வெற்றியை கொடுத்ததா?- தளபதியின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ஓர் அலசல்

First Published Oct 30, 2023, 10:37 AM IST

லியோ திரைப்படம் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், விஜய் நடித்த முந்தைய படங்களின் நிலவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Leo

நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றால் அது லியோ தான். இப்படத்தை சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல் படமும் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டு வரும் லியோ திரைப்படம் முதல் மூன்று தினங்களிலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்துவிட்டது. தற்போது 500 கோடியை தாண்டி லியோ வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படம் விஜய்க்கும் ஒரு மாஸான வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது.

varisu

லியோவுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பு இன்றி வெளிவந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இருப்பினும் அமெரிக்கா, கேரளா உள்பட ஒரு சில இடங்களில் இப்படம் பெரியளவில் வசூலை வாரிக்குவிக்காததால் இது பெரியளவில் வெற்றிப்படமாக அமையவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Beast

வாரிசுக்கு முன்னதாக பீஸ்ட் படம் திரைக்கு வந்தது. பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அப்படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு அப்படம் நஷ்டத்தை கொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளரும் நஷ்டமின்றி தப்பித்துவிட்டார். நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.250 கோடி வரை வசூலித்தது.

Master

பீஸ்ட் படத்துக்கு முன்னர் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கொரோனா காரணமாக ஓராண்டு தாமதமாக ரிலீஸ் ஆனது. இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நடிகர் விஜய், தியேட்டரில் தான் வெளியிடுவேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். அந்த சமயத்தில் வருவாய் இன்றி துவண்டு கிடந்த தியேட்டர்களுக்கு மாஸ்டர் படத்தின் வெற்றி தான் புத்துயிர் அளித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.230 கோடி வசூலித்து இருந்தது.

Bigil

பீஸ்ட் படத்துக்கு முன்னதாக பிகில் படத்தில் நடித்திருந்தார் விஜய். அட்லீ இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் விஜய் ரசிகர்களுக்கு செம்ம டிரீட்டாக அமைந்திருந்தது. நடிகர் விஜய்யின் கெரியரில் முதன்முறையாக ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த படமாக பிகில் அமைந்தது. இருப்பினும் இது கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவானதால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை.

இதையும் படியுங்கள்... லியோ படத்தில் ரசிகர்கள் கவனிக்க தவறிய டுவிஸ்டுகள் இத்தனை இருக்கா... Decode பண்ணிய லோகேஷ் கனகராஜ்

click me!