இன்று ரூ.150 கோடி சம்பளம்.. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Published : Jun 28, 2024, 12:06 PM ISTUpdated : Jun 28, 2024, 09:41 PM IST

இன்று பான் இந்தியா ஹீரோவாக வலம் வரும் நடிகர் பிரபாஸ் தனது முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
18
இன்று ரூ.150 கோடி சம்பளம்.. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு?

ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அடுத்தடுத்து தோல்விகளையும் சந்தித்து வந்த பிரபாஸ் சலார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். 

28

ஆனால் தொடர் பிளாப் படங்களை கொடுத்தாலும் பிரபாஸின் இமேஜ் வளர்ந்து கொண்டே செல்கிறது. அவருடைய சம்பளமும் உயர்ந்து வருகிறார். 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கல்கி படத்திற்கு பிரபாஸின் சம்பளம் என்ன? தனது முதல் படத்துக்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

38

பான் இந்தியா ஹீரோவாக வலம் வரும் பிரபாஸ் கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன. பிரபாஸின் படங்களால் இண்டஸ்ட்ரியில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும். அதுமட்டுமில்லாமல் சம்பளத்திலும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் இருக்கிறார்.

48

அந்த வகையில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கல்கி 2898 AD  படம் நேற்று வெளியானது நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் பிரபாஸ் லீட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் வெளியான முதல் நாளே உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் மேலும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சலார், கல்கி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.

58

சலார் 1 படத்திற்கு சுமார் பிரபாஸ் 120 கோடி சம்பளம் வாங்கினார் என்று கூறப்பட்டது. அதே போல் கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிரபாஸ் தனது முதல் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பார் என்று உங்களுக்கு தெரியுமா?

68

பிரபாஸ் 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயந்த் சி. பரஞ்சி இயக்கிய ஈஸ்வர் படம் நவம்பர் 11, 2002 அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்துக்கு பிரபாஸுக்கு வெறும் 4 லட்சம்தான் சம்பளம். இதனை பிரபாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

78

அடுத்த பத்தாண்டுகளில் வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிகாடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார், ஆனால் அடவி ராமுடு, சக்கரம், பௌர்ணமி, யோகி, போன்ற தோல்விப் படங்களிலும் நடித்தார். முன்னா, மற்றும் ஏக் நிரஞ்சன். பில்லா, மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

 

88

பின்னர், 2015-ல் பாகுபலி 1, பாகுபலி 2 என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார். இதன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறினார். பாகுபலி 1, பாகுபலி 2 இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் இடம்பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories