Drinking Water: மதுரையில் 3 நாட்களுக்கு குடீநீர் வராது - மாநகராட்சி அறிவிப்பு

By Velmurugan s  |  First Published Jun 28, 2024, 8:13 PM IST

வைகை அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. இந்நிலையில், வைகை அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணாக மதுரை மாநகராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

Tap to resize

Latest Videos

அதன்படி வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

click me!