யாராலும் கவனிக்கப்படாத விஜய்யின் மாஸ் சம்பவம்... தளபதி யார் பக்கத்துல உட்காந்திருக்காரு பாத்திங்களா?

Jun 28, 2024, 12:12 PM IST

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் நடத்தும் முதல் கல்வி விருது விழா இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயணம் செய்வது முதல் தங்குவது வரை அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பார்த்துக்கொண்டனர்.

கடந்த முறை இந்த விருது விழா நடந்தபோது சரியான திட்டமிடல் இல்லாததால் கூட்ட நெரிசல் மற்றும் விழா நிறைவடையே வெகு நேரம் ஆனது. அதனால் இந்த முறை விஜய் அருகில் யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டதோடு, இந்த விழாவுக்காக துபாயில் இருந்து ஸ்பெஷல் பவுன்சர்களும் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதனால் விஜய் வந்ததும் எளிதில் மேடைக்கு சென்று அனைவருக்கும் நன்றிகூறிவிட்டு பின்னர் மாணவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டார்.

அதிலும் விஜய் யார் அருகில் அமர்ந்தார் என்பது தான் ஹைலைட்டான விஷயம். நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட சின்னதுரையின் அருகில் சென்று நடிகர் விஜய் அமர்ந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தக் காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.