சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி… 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரம்!!

First Published Aug 11, 2022, 5:19 PM IST

ரக்ஷா பந்தனையொட்டி இன்று டெல்லியில் பிரதமர் மோடி சிறுமிகளுடன் அதனை கொண்டாடியதோடு, அவர்களுடன் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். 
 

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்:

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று ரைசினா ஹில்லில் உள்ள சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பியூன்கள், தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிறரின் மகள்களுன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். 

பிரதமருக்கு ராக்கி கட்டிய சிறுமிகள்:

பிரதமர் மோடியின் மணிக்கட்டில் ஒவ்வொரு பெண்ணும் ராக்கி கட்டி வந்தபோது, அவர்களை புன்னகையுடன் பிரதமர் வரவேற்றார். பிரதமர் மோடியின் கையில் சிறுமிகள் பலர் ராக்கி கட்டினர். 

சிறுமிகளுடன் உரையாடிய மோடி:

சிறுமிகள் ஒவ்வொருவராக ராக்கி கட்ட முன்வந்த போது அவர்களுடன் பிரதமர் உரையாடினார். ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் கேட்டு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

ஹர் கர் திரங்கா:

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை குழந்தைகளுடன் கொண்டாடினார். அப்போது சிறுமிகளுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன. அதனை மோடி சிறுமிகளுக்கு வழங்கினார்.  

தேசிய கொடியை அசைக்கும் பிரதமர் மோடி:

ராக்கி கட்டிய சிறுமிகளுடன் பிரதமர் மோடி தேசிய கொடியை அசைப்பதைக் காணலாம். குழந்தைகளால் 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்' கோஷங்களும் எழுப்பப்பட்டன.

சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன்:

சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதை டிவிட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி, இந்த சிறுமிகளுடன் மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் என்று குறிப்பிட்டிருந்தார்.

click me!