Parenting Tips : மசாஜ் செய்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதா..?

First Published May 27, 2024, 2:45 PM IST

இந்த பதிவில் குழந்தகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

புதிதாக பிறந்த குழந்தையை பராமரிப்பது மிகவும் கடினமான பணி என்றே சொல்லலாம். ஏனெனில், சின்ன கவனக்குறைவு கூட, அவர்கள் விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாகிறது. 

இதனால் பல பெற்றோர்கள், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த, மசாஜ் செய்கிறார்கள். மசாஜ் செய்வது குழந்தைகளுக்கு நிவாரணம் தருவதோடு மட்டுமோ, அவர்கள் நிம்மதியாக தூங்கவும் உதவுகிறது. இந்த பதிவில் குழந்தகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்..

Latest Videos


மசாஜ் செய்வதால் குழந்தையின் உடல் ரிலாக்ஸ் ஆக மாறுகிறது. எனவே, இதற்கு நீங்கள் நல்ல பேபி ஆயிலைக் கொண்டு குழந்தையை லேசாக மசாஜ் செய்யுங்கள். இது குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது.

மசாஜ் குழந்தையின் எலும்புகளை பலப்படுத்துவது மட்டுமின்றி, அவர்களின் உடல் நெகிழ்வாக இருக்கவும் உதவுகிறது.

மசாஜ் செய்வதன் மூலம், குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் மேம்படுவது மட்டுமல்லாமல், அவர்களது உடலும் சிறப்பாக வளரும். 
உண்மையில், குழந்தைகளின் உடலில் இரத்தம் சரியாக செல்லவில்லை என்றால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, இதற்கு ஒரே தீர்வு மசாஜ் தான்.

இதையும் படிங்க:  Parenting Tips : பெற்றோர்களின் கவனத்திற்கு! குழந்தை எதையாவது விழுங்கி விட்டால் உடனே 'இத' செய்யுங்க!

குழந்தையின் வயிற்றில் மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையின் செரிமானம் ஆரோக்கியமாகவும் இருக்கும், வாயு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  Parenting Tips : குழந்தைகள் ஏன் காட்டூன் பார்க்க கூடாது தெரியுமா..?

குழந்தைக்கு மசாஜ் செய்வதன் மூலம், குழந்தையின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் சரியாக வேலை செய்கிறது. ஏனெனில் மசாஜ் குழந்தையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால்  குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!