தொடர் சொதப்பல்: கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படும் பாபர் அசாம்?

By Velmurugan s  |  First Published Sep 7, 2024, 11:54 PM IST

அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளில் பாபர் அசாம் தொடர்ந்து சோபிக்க தவறி வறுவதால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது.


பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் Babar Azam தனது வெள்ளைப் பந்து கேப்டன் பதவியை இழக்க உள்ளதாக Cricket Pakistan தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் மோசமான காலகட்டத்தை கடந்து வருகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட்களிலும் வங்கதேச அணியிடம் படுதோல்வியடைந்தது. 

Reports suggest that Babar Azam may be at risk of losing the white-ball captaincy once again. pic.twitter.com/qJnuLgS2tf

— Faiz Fazel (@theFaizFazel)

பாகிஸ்தான் டெஸ்ட் துணை கேப்டன் Saud Shakeel, சாம்பியன்ஸ் ஒன் கே கோப்பைக்கான கேப்டன்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் Shaheen Shah Afridi, Shadab Khan, Mohammad Haris மற்றும் Mohammad Rizwan ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அறிக்கையின்படி, நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக புதிய வெள்ளைப் பந்து கேப்டனை பிசிபி நியமிக்கக்கூடும்.  

Latest Videos

undefined

Virat Kohli Modern Cricket: நவீன கிரிக்கெட்டின் சாதனையை முறியடித்த ஒன் அண்ட் ஒன் மேஸ்ட்ரோ விராட் கோலி!

Babar Azam மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 29 வயதான வீரர் முதல் இன்னிங்ஸில் 71 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி எதிரணியை காலி செய்த டாப் 6 ஸ்பின்னர்கள்

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறத் தவறியதை அடுத்து Babar தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பைக்காக மீண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுடன் குரூப் A பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான், தொடக்க ஆட்டங்களில் அமெரிக்கா மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவிடம் தோல்வியடைந்ததால் லீக் சுற்றுடன் வெளியேறியது.  

click me!