Parenting Tips : குழந்தைகள் ஏன் காட்டூன் பார்க்க கூடாது தெரியுமா..?

First Published May 10, 2024, 5:43 PM IST

குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதால் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பெற்றோர்கள் வீட்டில் வேலை செய்யும் போது அல்லது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது அவர்கள் செய்யும் முதல் காரியம் மொபைல் போன் மற்றும் டிவியில் கார்ட்டூன்களை போட்டு காட்டுவது தான். ஆனால், இது குழந்தைகளை எப்படி பாதிக்கிறது தெரியுமா..?

வன்முறையை கற்றுக் கொள்ளலாம்: வன்முறையை சித்தரிக்கும் கார்ட்டூன்களை பார்ப்பது குழந்தைகளை நிஜ வாழ்க்கையிலும் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கும். மேலும் வன்முறையை அனுபவித்தாலும் அவர்கள் அதிலிருந்து விடுபடலாம் என்று தவறான தகவல்கள் அதில் வருவதால், 
குழந்தைகள் அதை கற்றுக்கொண்டு, அதன்படி, வன்முறையில் ஈடுபட வாய்ப்பு அதிகம்.

மோசமான நடத்தை: தங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் முரட்டுத்தனமான அல்லது கீழ்படியாத நடத்தையை காட்டும் பல கார்ட்டூன்ங்கள் உள்ளன. மேலும், குழந்தைகள் இந்த நடத்தையைப் பின்பற்றி மோசமான நடத்தையில் வளர வாய்ப்பு அதிகம் உள்ளது.

கெட்ட மொழிகளை கற்றுக் கொள்ளலாம்: கார்ட்டூன்ங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பொருந்தாத மொழியை கொண்டிருக்கின்றனர். இதை பார்க்கும் குழந்தைகள் கார்ட்டூன்ங்களில் இருந்து மோசமான மொழியை கற்றுக்கொண்டு அதை தங்கள் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த வாய்ப்பு அதிகம்.

முரட்டுத்தனமான நடத்தை: சமூக விரோத நடத்தையை ஊக்குவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கு தவறான செய்திகளை கொடுக்கும் பல கார்ட்டூன்கள் உள்ளன. அவை, உங்கள் குழந்தையின் நடத்தையை பாதிப்பது மட்டுமின்றி, அதன்படி, குழந்தைகள் வன்முறையில் வளருவார்கள்.

உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்: மணிக்கணிக்கில் டிவி அல்லது மொபைலை பிடித்துக் கொண்டு கார்ட்டூன்களை பார்ப்பது வேலையின்மை மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையால், குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க: Parenting Tips : உங்கள் குழந்தைக்கு சரியான படிப்பை தேர்வு செய்ய குழப்பமாக இருக்கா..? இந்த 10 வழிகள் உதவும்!

மோசமான கதை பாத்திரத்தை பின்பற்றுவது: குழந்தைகள் பொதுவாக தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்தை விரும்புவதால் அதனை பின்பற்றுகிறார்கள் அல்லது அவர்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் இருக்க விரும்புகிறார்கள். இது குழந்தைகளை தவறான பாதையில் வழி நடத்தும்.

இதையும் படிங்க: Parenting Tips : பிறந்த குழந்தையின் கண்களில் மை வைப்பது நல்லதா..? உண்மையும் கட்டுக்கதைகளும் இதோ!

அடிமையாகலாம்: குழந்தைகள் கார்ட்டூன்களை பார்ப்பதால் அதில் அடிமையாக வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள், பொறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு பாதிக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!