Priyanka Chopra gift: பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்...விலை எவ்வளவு தெரியுமா..?

First Published May 23, 2022, 11:37 AM IST

Priyanka Chopra gift: பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் நிக் ஜோனஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

priyanka-chopr

பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர், இந்திய திரையுலகை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து  அசத்தியுள்ளார். இவர் திரைப்படங்களை தாண்டி நிறைய வெப் சீரியஸிலும் நடிக்கிறார்.

priyanka-chopr

பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான, நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை இவர்கள் பெற்று இருந்தார்கள்.அமெரிக்காவில் உள்ள ஊடகங்கள், இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

priyanka-chopra

இதையடுத்து, மகளுக்கு மாலடி மேரி எனவும் பெயரி வைத்தனர். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். 
 

priyanka-chopra

இந்த நிலையில், பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் நிக் ஜோனஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கார் ஒன்றை Cidatel என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ராவிடம் சென்று கொடுத்துள்ளார். 

Priyanka Chopra

சிறந்த கணவர் என்ற ஹேஸ்டேக்கை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரியங்கா, அந்த காரை ஓட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த காரின் பக்கவாட்டில் mrs.jones என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், அந்த காரின் விலை இந்திய விலைப்படி 17 முதல் 22 லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

 மேலும் படிக்க...கையில் சரக்கு பாட்டில்...ஆண் நண்பர்களுடன் வேற லெவல் கவர்ச்சி ஆட்டம், கோமாளி பட நடிகையை விமர்சிக்கும் நெட்டிசன்..

click me!