Dheena & Billa: ரீ-ரிலீஸில் கில்லி பட வசூலில் பாதிகூட கிடைக்கலயா? பாக்ஸ் ஆபிஸில் பரிதாப நிலையில் அஜித் படங்கள்

First Published May 2, 2024, 8:38 AM IST

நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி தீனா மற்றும் பில்லா படங்கள் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

dheena, ghilli

அஜித் - விஜய் இருவருமே சமகால நடிகர்கள் என்பதால் அவர்களது படங்களுக்கு எப்போதுமே போட்டி இருக்கும். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தன. அதன்பின்னர் தற்போது அவர்கள் நடித்த பழைய படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த வகையில் விஜய்யின் கில்லி திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக அஜித்தின் இரண்டு படங்கள் களமிறங்கி உள்ளன.

Billa Re Release

அதன்படி அஜித்தின் எவர்கிரீன் ஹிட் படங்களான தீனா மற்றும் பில்லா படங்கள் நேற்று அஜித்தின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. கில்லி படம் ஓடிய திரையரங்குகளில் விஜய் பேனரை கிழித்தும், தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தும் அஜித் ரசிகர்கள் அராஜகம் செய்தனர். குறிப்பாக சென்னையில் உள்ள காசி திரையரங்கில் விஜய்யின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர்கரை அலேக்காக தூக்கி கைது செய்த போலீசார், அவரை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவும் வெளியிட்டனர்.

இதையும் படியுங்கள்... "ஏன் இவ்வளவு வன்மம்.." விஜய்யின் கில்லி பட போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் கைது..

Ghilli Re Release

பொதுவாகவே விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் ஆனால் அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வைத்து சமூக வலைதளங்களில் ஒரு விவாதமே நடக்கும். அந்த வகையில் கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி முதல் நாளே ரூ.8 கோடி வசூலித்து வரலாறு படைத்தது. தற்போது அஜித்தின் தீனா மற்றும் பில்லா என இரண்டு படங்கள் ரீ-ரிலீஸ் ஆனதால், அந்த படங்கள் கில்லி பட வசூல் சாதனையை முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

Billa and Dheena Re Release collection

ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. கில்லி படத்தின் முதல் நாள் வசூலில் பாதி கூட பில்லா மற்றும் தீனா படங்களுக்கு கிடைக்கவில்லையாம். அந்த இரண்டு படங்களுமே முதல் நாளில் ஒரு கோடி கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்படத்தை பெரியளவில் புரமோட் செய்யாததும் அதன் வசூல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்த நாட்களிலும் முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லாததால் அப்படங்கள் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படவும் வாய்ப்புள்ளதாம்.

இதையும் படியுங்கள்... Uma Ramanan : நிழல்கள் முதல் திருப்பாச்சி வரை - பாடகி உமா ரமணன் குரலில் சூப்பர் ஹிட்டான டாப் 5 பாடல்கள்!

click me!