Sellur Raju: முதலமைச்சர் கொடைக்கானலில் கூலாக இருந்து விட்டு வரட்டும்..நாங்க விமர்சிக்க மாட்டோம்-செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published May 2, 2024, 8:23 AM IST

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது என விமர்சித்த செல்லூர் ராஜூ போதைப் பொருள் நடமாட்ட விவாகரத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக காவல்துறையினர் போதை பொருள் விவகாரத்தில் கண்டும், காணாதுமாக உள்ளனர் என தெரிவித்தார். 


அதிமுக தொழிலாளர்களுக்கு கடினமான பணி

அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை மு்ன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். தொடர்ந்து  கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தண்ணீர் பந்தல்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அரசு பேருந்துகளில் உதிரி பாகங்களை ஒட்டுனர்கள், நடத்துநர்கள் தங்களுடைய சொந்த செலவில் மாற்ற போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. கடினமான பணிகளை அதிமுக தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும், எளிமையான பணிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சியை தொழிற்சங் ஓட்டுநர்களுக்கும் நிர்வாகம் வழங்குவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

பொதுமக்களின் உயிரோடு இப்படி விளையாடலாமா முதல்வரே? இது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? டிடிவி. விளாசல்!

போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு

ஆளும் திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை,  மழை வெள்ள பேரிடர் காலத்திலும், கடுமையான வெயில் நிலவும் காலத்திலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.  திமுக அரசிற்கு மக்களின் பலம் தேவையில்லை எனவும், கூட்டணி கட்சிகளின் பலம் போதுமானது என நினைக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.  தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. போதைப் பொருள் நடமாட்ட விவாகரத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக காவல்துறையினர் போதை பொருள் விவகாரத்தில் கண்டும், காணாதுமாக உள்ளனர்

கூலாக இருந்துவிட்டு வரட்டும்

முதலமைச்சர் கொடைக்கானல் பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், முதலமைச்சர் கொடைக்கானலில் கூலாக இருந்து விட்டு வரட்டும், முதலமைச்சர் குடும்பத்துடன் மேற்கொண்டுள்ள பயணச் குறித்து விமர்சனம் செய்ய மாட்டோம் என தெரிவித்தார். அதே நேரத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாடு பயணம் குறித்து கலைஞர் விமர்சனம் செய்தார். அத்தகைய முறையில் நாங்கள் முதலமைச்சர் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை என கூறினார். 

2 முறை தோல்வி... 3 வது முறை வெற்றி.. ஐஏஎஸ் தேர்வில் தனது விடா முயற்சியால் வெற்றி பெற்ற பீடித்தொழிலாளி மகள்

click me!