நெல்சன் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் வரை.. 2023-ல் தரமான கம்பேக் படங்களை கொடுத்த டாப் 5 தமிழ் இயக்குனர்கள் லிஸ்ட்

First Published Nov 30, 2023, 12:11 PM IST

தமிழ் சினிமாவில் பிளாப் படங்களை கொடுத்த இயக்குனர்கள் 2023-ல் கொடுத்த தரமான கம்பேக் திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

comeback Directors

2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றியடைந்ததை போல் டாடா, அயோத்தி, குட் நைட், போர் தொழில், சித்தா, இறுகப்பற்று போன்ற சிறு பட்ஜெட் படங்களும் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டு கம்பேக் கொடுத்த 5 தமிழ் சினிமா இயக்குனர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நெல்சன்

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் கடுமையாக கேலி கிண்டலுக்கு ஆளான இயக்குனர் நெல்சன், அடுத்ததாக ரஜினி உடன் கூட்டணி அமைத்த படம் தான் ஜெயிலர். இப்படம் தொடங்கும்போது பல்வேறு தடங்கல்களை சந்தித்தாலும், தன்னுடைய விடாமுயற்சியால் இப்படத்தை இயக்கி முடித்து விஸ்வரூப வெற்றி கண்டுள்ளார் நெல்சன். இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்த படம் ஜெயிலர் என்கிற பெருமையோடு கம்பேக் கொடுத்துள்ளார் நெல்சன்.

எச்.வினோத்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து, அவர்கள் கூட்டணியில் கடந்தாண்டு வலிமை என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது விமர்சன ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது. இப்படத்திற்கு பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத், அப்படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்து வெற்றிகண்டதன் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆதிக் ரவிச்சந்திரன்

பஹீரா என்கிற அட்டர் பிளாப் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. விஷால், எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான நடிப்பில் டைம் டிராவல் கதையம்சம் கொண்ட படமாக வெளியான இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து ஆதிக்கிற்கும் கம்பேக் படமாக அமைந்தது.

யுவராஜ் தயாளன்

வடிவேலு நடித்த எலி படத்தின் தோல்விக்கு பின்னர் திரையுலகை விட்டே ஒதுங்கி இருந்த யுவராஜ் தயாளன், 8 ஆண்டுகளுக்கு பின் இயக்கிய திரைப்படம் தான் இறுகப்பற்று. இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளம் தம்பதியினர் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது இப்படம். இப்படம் இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளதோடு, யுவராஜுக்கும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளது.

அருண்குமார்

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இவர், மூன்றாவதாக இயக்கிய சிந்துபாத் என்கிற திரைப்படம் தோல்வி அடைந்தது. அப்படத்தின் தோல்விக்கு பின் 4 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த அருண், இந்த ஆண்டு சித்தா என்கிற தரமான படம் மூலம் கம்பேக் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இது காரா இல்ல மினி ஏரோபிளைனா.. நயன்தாரா வாங்கி இருக்கும் 'Mercedes Maybach' காரில் இத்தனை வசதிகள் இருக்கா!

click me!