நெல்லை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தாகிறதா? என்ன காரணம்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

First Published Apr 11, 2024, 7:41 AM IST

நெல்லை மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tirunelveli Lok Sabha constituency

நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் 1,500 கோடி ரூபாய் சொத்துக்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

Madurai High Court

அதில், நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஆனால், தனது வேட்பு மனுவில் அது பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளார். மேலும், வேட்பு மனு முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என தெரிவித்தார். அதேபோல் 1,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மறைத்தும் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து நான் நெல்லை மக்களவை தேர்தல் அதிகாரியிடம் முறையாக மனு அளித்திருந்தேன். ஆனால் அந்த மனு மீது எந்தவித விசாரணையும் செய்யாமல், நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது இது சட்டவிரோதம்.

Nainar Nagendran

எனவே மனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் முறையாகச் செயல்படாத தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Tirunelveli lok sabha constituency nainar nagendran

ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது  அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!