சமந்தாவிற்கு இன்று ஸ்பெஷலான நாள்... முதல் ஆளாக வாழ்த்து சொன்ன நயன்தாரா - அப்படி என்ன ஸ்பெஷல்?

First Published Feb 26, 2024, 2:59 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

samantha, Nayanthara

நடிகை சமந்தா, தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் பீஸ் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்த சமந்தாவை, அதன் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் கவுதம் மேனன். அப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

14 years of samantha

அதுமட்டுமின்றி அப்படம் ரிலீஸ் ஆன பிப்ரவரி 26-ந் தேதி சமந்தாவுக்கு மிகவும் ஸ்பெஷலான நாளாகும். அந்த நாளை ஆண்டுதோறும் அவரும், அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்றுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரிலீஸ் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. அதுமட்டுமின்றி நடிகை சமந்தா நடிகையாக அறிமுகமாகியும் இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பூர்ணிமாவா இது? கடற்கரையில் கவர்ச்சி புயலாக மாறி போட்டோஷூட் நடத்தியதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Nayanthara wishes samantha

அதனை சமந்தா ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி #14YearsofSamanthaLegacy என்கிற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அதோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சமந்தாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நடிகை சமந்தாவின் தோழியும், நடிகையுமான நயன்தாரா, சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

samantha insta story

சமந்தாவின் புகைப்படத்தை பகிர்ந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துக்கள். உனக்கு நிறைய ஆற்றல் கிடைக்கட்டும் என பதிவிட்டுள்ளார் நயன். இதற்கு பதிலளித்துள்ள சமந்தா, நன்றி என் அழகியே என குறிப்பிட்டிருக்கிறார். நடிகை சமந்தாவும், நயன்தாராவும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து பணியாற்றியபோது தோழி ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வித்தியாசமான முகங்கள்..! பாலிவுட் போனதும்... அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறிய கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்

click me!